டெல்அவிவ், அக். 25- இஸ்ரேலின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள அரபு நகரமான உம் அல் பஹ்ம் நகரில் உள்ள ஒரு வனப்பகுதிக்கு அருகே காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வனப்பகுதிக் குள் இருந்து மண்வெட்டி மற்றும் மெட்டல் டிடெக்டருடன் வாலி பர்கள் 2 பேர் வெளியே வந்ததை காவல்துறையினர் பார்த்தனர். பின்னர் அந்த வாலிபர்கள் இரு வரும் காரில் ஏறி அங்கிருந்து புறப் பட்டனர். அவர்கள் மீது சந்தேக மடைந்த காவல்துறையினர் வேக மாக சென்று அவர்களின் காரை வழிமறித்து சோதனை செய்தனர்.
அப்போது காரில் இருந்த தொன்மை வாய்ந்த 2 நாணயங் களை காவல்துறையினர் கைப்பற்றி னர்.
அதன் பின்னர் காவல்துறையினர் அந்த 2 நாணயங்களையும் தொல்பொருள் ஆணையத்திடம் ஒப்படைத்தனர். தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆய்வு செய்ததில் அந்த 2 நாணயங்களில் ஒன்று சுமார் 2,300 ஆண்டுகளுக்கு முந் தையது என்பது தெரியவந்தது.
அந்த நாணயத்தின் ஒருபுறம் கிரேக்க ஜீயசின் உருவம் பொறிக் கப்பட்டுள்ளதாகவும், மறுபுறம் மின்னல்கள் வெட்டும்போது கழுகு இறக்கைகளை மூடி நிற்பது போல அலங்கரிக்கப்பட்டுள்ள தாகவும் ஆய்வாளர்கள் தெரிவித் தனர். மேலும் அந்த நாணயத்தில் டோலமிக் வம்சத்தை சேர்ந்த எகிப்து மன்னரின் பெயர் கிரேக்க மொழியில் பொறிக்கப்பட்டிருப்ப தாக தெரிவித்த ஆய்வாளர்கள் அந்த நாணயம் குறித்து தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாகவும் கூறி னர்.
No comments:
Post a Comment