வாசிங்டன், அக். 25- அமெரிக் காவின் பன்னாட்டு மேம்பாட்டு நிதி கழகம், அந்த நாட்டின் மேம் பாட்டு வங்கி ஆகும். இது உலகமெங்கும் பல்வேறு நாடுகளில் முதலீடுகளை செய்கிறது. இதன் தலை மைச்செயல் அதிகாரி டேவிட் மார்சிக், உயர் மட்ட தூதுக்குழுவுடன் இந்தியா வருகிறார். 26ஆம் தேதி வரை இங்கு சுற்றுப்பயணம் மேற் கொள்கிறார்.
இவர் இந்தியா வரும் நிலையில், கரோனா தடுப்பூசி உற்பத்தியில் இந்தியா பெரும் சக்தி யாக திகழ்கிறது என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். இதுபற்றி அவர் கூறும் போது, “இந்தியா தடுப் பூசியில் மாபெரும் சக்தி ஆகும். அந்த நாட்டுடன் அமெரிக்காவின் பணி, மக்களின் உயிர்களைக் காப்பாற்றுகிறது. 2.3 பில்லியன் டாலருக்கும் அதிகமான (சுமார் ரூ.17 ஆயிரத்து 250 கோடி) எங்களது முதலீட்டில் இந்தியா மிக முக்கிய மான, மிகப்பெரிய கூட் டாளி நாடு ஆகும்” என வும் குறிப்பிட்டார் அதன் தலைமை அதிகாரி.
No comments:
Post a Comment