பதவியேற்கும் போதே ஆளுநருக்கு அடி: அதிர்ச்சியில் அதிகாரிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 25, 2021

பதவியேற்கும் போதே ஆளுநருக்கு அடி: அதிர்ச்சியில் அதிகாரிகள்

துபாய், அக். 25- ஈரானில்  கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தின் புதிய ஆளு நராக நியமிக்கப்பட்ட அபிதின் கோரம்  பதவி யேற்பு விழாவில் பேசிக் கொண்டு இருந்த நிலை யில் மேடை ஏறிய ஒருவர் திடீரென அவரது பின் னந்தலையில் பளார் என்று அடித்து சண்டையிட தொடங்கினார்.

உடனடியாக பாது காப்பு பணியில் பாதுகாவ லர்கள்  அவரை குண்டுக் கட்டாக தூக்கி வெளி யேற்றினர். விசாரணை யில் தாக்குதலில் ஈடுபட் டவர் அயுப் அலிசாதே என்பது தெரியவந்துள் ளது. இந்த தாக்குதலுக் கான காரணம் தெரிவிக் கப்படவில்லை என்ற போதும், தன் மனைவிக்கு ஆண் மருத்துவர் சிகிச்சை அளித்ததற்காக அவர்  கோபத்தில் இருந்தார் என்று உள்ளூர் ஊடகங் கள் செய்தி வெளியிட்டு உள்ளன.

ஈரானின் அசர்பை ஜான் மாகாண ஆளுந ராக அபெதின் கோர்ராம் பதவியேற்கும் பொது, நிகழ்ச்சி மேடையில் ஏறி அவரை அடித்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.

பதவியேற்பு விழாவில் பேசிக் கொண்டு இருந்த கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநரை, ஒரு வர் பளார் என்று அடித்த காட்சி சமூக வலைதளங் களில் வேகமாக பரவி வருகிறது என்பது குறிப் பிடத்தக்கது

No comments:

Post a Comment