ஜெருசலேம், அக். 25 இஸ்ரே லுக்கும் பாலஸ்தீனத்திற் கும் இடையே பல ஆண்டு களாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத் தின் மேற்குகரை பகுதி யில் முகமது அப்பாஸ் தலைமையிலான அரசு ஆட்சி நடைபெற்று வரு கிறது. அதேவேளை பாலஸ் தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியான காசா முனையில் ஹமாஸ் அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. இந்த ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது.
இந்த அமைப்பு இஸ் ரேல் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகி றது. இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது.
இதற்கிடையில், மேற்குகரை மற்றும் காசா முனையின் ஒருசில பகுதி களை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டில் வைத்து உள்ளது. இப்பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீன மக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது.
மேலும், பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட் டுகள் நிலவி வருகிறது. இந்த மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான தகவல்களை காசா முனை, மேற்குகரையில் செயல்பட்டு வரும் பாலஸ் தீன மனித உரிமைகள் அமைப்புகள் வெளியுல கத்திற்கு கொண்டு வரு கிறது.
இந்நிலையில், காசா முனை மற்றும் மேற்குக் கரையில் செயல்பட்டு வரும் 6 பாலஸ்தீன மனித உரிமைகள் அமைப்பு களை இஸ்ரேல் பயங்கர வாத இயக்கங்களாக அறி வித்துள்ளது.
மனித உரிமைகள் அமைப்பு என்ற பெயரில் இந்த 6 அமைப்புகளும் அய்ரோப்பிய நாடுகள் மற்றும் உலகின் பல பகுதி களில் இருந்து நிதியை பெற்று அவற்றை தங்கள் நாட்டுக்கு எதிராக பயங் கரவாத தாக்குதல்கள் நடத்தும் அமைப்புக ளுக்கு நிதியுதவி வழங்கு வதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது. குறிப் பாக, 'பாப்புலர் ப்ரண்ட் ஃபார் தி லிபரேஷன் ஆஃப் பாலஸ்தீன்’ என்ற பயங்கரவாத அமைப் புக்கு இந்த அமைப்புகள் நிதியுதவி வழங்குவதாக இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.
இந்த 6 பாலஸ்தீன மனித உரிமைகள் அமைப் புகளும் பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப் பட்டதன் மூலம் இந்த அமைப்புகளின் அலுவல கங்களை சோதனையிடவும், சொத்துக்களை பறிமுதல் செய்யவும், அந்த அமைப்பில் பணி புரியும் ஊழியர்களை கைது செய்யவும், அமைப் பிற்கு வரும் நிதியை குற்ற மாக்கவும் அதன் மூலம் இந்த அமைப்புகள் மீது சட்டரீதியிலான நடவ டிக்கை எடுக்கவும் இஸ் ரேல் பாதுகாப்பு படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இஸ் ரேலின் இந்த நடவடிக் கைக்கு சில இஸ்லாமிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment