காபூல், அக். 25- ஆப்கானிஸ் தான் தலைநகர் காபூலில் மருந்து கடை நடத்தி வந்த வர் பன்சிறீலால் அரிண்டா (வயது 50). இந்தியரான இவர் கடந்த மாதம் 14ஆம் தேதி வழக்கம் போல் தனது கடைக்கு சென்று கொண்டி ருந்த போது சிலர் துப்பாக்கி முனையில் மிரட்டி அவரை கடத்தி சென்றனர்.
டில்லியில் வசித்து வரும் பன்சிறீலால் அரிண்டாவின் குடும்பத்தினரின் கோரிக்கையின் பேரில், அவரை மீட்பதற்கு ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்தது.
அதனை தொடர்ந்து கடத்தப்பட்ட 2 வாரங்களுக்கு பின்னர் கடந்த மாதம் 29ஆம் தேதி பன்சிறீலால் அரிண்டா விடுவிக்கப்பட்டார். அதன் பின்னர் இந்திய அதிகாரிகளின் பாதுகாப்பில் இருந்து வந்த பன்சிறீலால் அரிண்டா விமானம் மூலம் டில்லி வந்து சேர்ந்தார்.
பயணத்தடையை நீக்கியது சிங்கப்பூர்
சிங்கப்பூர், அக். 25- தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பன்னாட்டு விமான போக்குவரத்துக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அந்த வகையில் இந் தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், மியான்மர், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளை சேர்ந்த பயணிகள் சிங்கப்பூர் வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சிங்கப்பூரில் தற்போது கரோனா வைரஸ் பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் இருந்து வரு கிறது. இதனால் அந்த நாட்டு அரசு கரோனா கட்டுப் பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 நாடுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை நீக்கப்படுவதாக சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது. இந்த தளர்வு வருகிற 27-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மேற்கூறிய நாடுகளில் இருந்து வருவோர் கட்டாயம் 10 நாட்களுக்கு தனிமையில் இருக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
No comments:
Post a Comment