இறைச்சி பேக்கிங் தொழிலாளர்கள் 269 பேர் உயிரிழப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 30, 2021

இறைச்சி பேக்கிங் தொழிலாளர்கள் 269 பேர் உயிரிழப்பு

வாசிங்டன், அக். 30- உலக நாடுகளில் பரவியுள்ள கரோனா பாதிப்புக்கு அமெரிக்கா அதிகளவில் இழப்புகளை சந்தித்து உள்ளதுஅந்நாட்டில் 80 சதவீதம் அளவுக்கு இறைச்சி தேவையை பூர்த்தி செய்யக் கூடிய நிறுவனங் களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட கரோனா பாதிப்பு பற்றிய ஆவணங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

அதில், முன்பு மதிப்பிடப்பட்ட விவரங்களை விட 3 மடங்கு கூடுதலாக பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு உள்ளன என அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளதுஇதன்படி, 59 ஆயிரம் பேருக்கு பாதிப்புகளும், 269 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

சீனாவில்  குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது

பெய்ஜிங், அக். 30- சீனாவின் உகான் நகரில்தான் கரோனா வைரஸ் தொற்று கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் தோன்றியது. இப்போது உலகின் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த தொற்று பரவி இருக்கிறது. இந்த தொற்றுக்கு எதிராக உலக நாடுகளில் தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில், சீன நாட்டின் தலைநகரான பீஜிங்கில் 3 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. ஏற்கனவே இந்த தொற்று பாதிப்புக்கு ஆளான குழந்தைகள், 6 மாதங்களுக்கு பிறகு தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என தெரிவிக் கப்பட்டுள்ளது.

இந்தியாவை பொறுத்தமட்டில் குழந்தைகளுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி அடுத்த ஆண்டு ஜனவரி- மார்ச்சுக்குள் தொடங்கி விடும் என தகவல்கள் வெளியானது நினைவுகூரத்தக்கது

No comments:

Post a Comment