இப்படியும் ஒரு மூடத்தனம்! இறந்த தாயின் உடலுடன் மகள்கள் 2 நாள் ஜெபமாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 10, 2021

இப்படியும் ஒரு மூடத்தனம்! இறந்த தாயின் உடலுடன் மகள்கள் 2 நாள் ஜெபமாம்

திருச்சி, அக். 10- உடல் நலக்குறை வால் இறந்த தாயை, மீண்டும் உயிர்ப்பிப்பதாக கூறி வீட்டி லேயே வைத்து, மகள்கள்பிரார்த் தனை' செய்த சம்பவம், அதிர்ச் சியை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம், மணப் பாறை அருகே சொக்கம்பட் டியில் ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு வீட்டில் இருந்து, நேற்று முன்தினம் (8.10.2021) இரவு, ஜெபம் செய்து பிரார்த்திக்கும் சத்தம் கேட்டுள்ளது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், மணப் பாறை காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.இதுதவிர, ‘108’ ஆம்புலன்ஸ் ஓட்டுநரும், இறந்த மூதாட்டியின் உடலை அந்த வீட்டில் வைத்திருப்பதாக காவல்துறைக்குத் தகவல் கொடுத்து உள்ளார்.

இரவு 11:30 மணியளவில், காவல்துறையினர் மற்றும் வரு வாய் துறை அதிகாரிகள் அந்த வீட்டிற்கு சென்றனர்.வீட்டுக்குள் இருந்தவர்கள், கதவை திறக்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடு பட்டுள்ளனர். காவல்துறையி னர் சமாதானப்படுத்தி, கதவை திறக்க வைத்துள்ளனர். வீட்டுக் குள் மேரி  (வயது 75) என்ற மூதாட்டியின் உடலை கிடத்தி வைத்திருந்தனர். அவர் இறந்து இரண்டு நாள்களுக்கு மேலாகி இருந்ததால், உடல் அழுகி, பற்கள் வெளியே நீட்டி, விழிகள் பிதுங்கி மிகவும் கோரமாக காணப்பட்டது; துர்நாற்றமும் வீசியது.

வீட்டில் இருந்த ஜெசிந்தா (43) ஜெயந்தி (40) ஆகியோரிடம் விசாரித்த போது, அவர்கள் இருவரும் மேரியின் மகள்கள் என்பதும், தாய் கோமாவில் இருப்பதாகவும், அவரை உயிரு டன் மீட்பதற்காகபிரார்த்தனை' செய்வதாகவும் தெரிவித்தனர். மேரி இறந்து விட்டதை எடுத் துக் கூறி, உறவினர்களை வர வழைத்து, அவர்களை சமாதா னப்படுத்த அதிகாரிகள் படாத பாடு பட்டனர்.

ஒருவழியாக நேற்று (9.10.2021) அதிகாலை 3:00 மணியளவில், மேரி உடலை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப் பினர். நேற்று காலை மணப் பாறை அரசு மருத்துவமனைக்கு சென்ற மகள்கள் இருவரும், ‘தாய் மேரிக்கு உணவு கொடுக்க வேண்டும்என, அங்கிருந்த மருத்துவர்களிடம் கேட்டு உள் ளனர். மேரி இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்த பின் னும், உடற்கூராய்வு முடியும் வரை அங்கேயே அமர்ந்து, பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

திருமணமாகாத மகள்களு டன் வசித்த மேரி, உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். 7ஆம் தேதி மகள்கள் இருவரும், தாயை 108 ஆம்புலன்ஸ் மூலம், திருச்சி யில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள் ளனர். அங்கு பரிசோதித்த மருத் துவர், மேரி இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். அதன்பின், உடலை வீட்டுக்கு கொண்டு வந்த மகள்கள், வீட்டுக்குள் வைத்துபிரார்த்தனை' செய்து உள்ளனர். அன்று, புதுச்சேரியில் இருந்து வீட்டுக்கு வந்த உறவின ரிடம், தாய் கோமாவில் இருப்ப தாக தெரிவித்துள்ளனர்.இத னால், மேரியின் மகள்களுக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருக்க லாம் என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரிக்கின்றனர்.

கிறிஸ்தவ மத வழிபாடுகளின் மீதான ஆழ்ந்த மூடநம்பிக்கை யின் காரணமாகவே மகள்கள் இவ்வாறு இறந்த தாயின் உடலை வைத்துபிரார்த்தனை' நடத்தி வழிபாடுகளை மேற்கொண்டு உள்ளனர்.

No comments:

Post a Comment