வாசிங்டன், அக். 30- ஆப்கானிஸ் தானில் மீதம் இருக்கும் அமெரிக் கர்கள் அனைவரும் இன்னும் 2 வாரங்களில் முழுமையாக மீட்கப் படுவார்கள் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டு களாக முகாமிட்டு இருந்த அமெ ரிக்க படைகள் முழுமையாக வெளியேறிய பிறகு, அங்கு தலி பான்கள் ஆட்சி நிர்வாகத்தை கைப்பற்றினர்.
இதையடுத்து கடந்த ஆகஸ்டு மாதம் ஆப்கானிஸ்தானை தலி பான்கள் முழுமையாக தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதனை தொடர்ந்து அவர்கள் அங்கு ஆட்சியில் இருந்த ஜன நாயக அரசை அகற்றிவிட்டு புதி தாக இடைக்கால அரசை அமைத் தனர். தலிபான்களின் இந்த இடைக் கால அரசை பெரும்பாலான நாடுகள் இன்னும் முறைப்படி அங்கீகரிக்கவில்லை. எனினும் பாகிஸ்தான், சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் தலிபான்களின் அரசுக்கு ஆதரவு தெரிவித்துள் ளன.
இதற்கிடையில் ஆப்கானிஸ் தானில் இருந்து அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்கள் நாட்டு மக்களை விமானங் கள் மூலமாக அழைத்து வந்தன. அந்த வகையில் ஆப்கானிஸ்தானில் மீதம் இருக்கும் அமெரிக்கர்கள் அனைவரும் இன்னும் 2 வாரங் களில் முழுமையாக மீட்கப்படு வார்கள் என அமெரிக்க அரசின் மேலாண்மை மற்றும் வளங்களுக் கான மாநில துணை செயலாளர் பிரையன் மெக்கன் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப் கானிஸ்தானில் 439 அமெரிக் கர்கள் உள்ளதாகவும், அவர் களில் 363 பேருடன் தொடர் பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவர்களில் 176 பேர் மட்டுமே அமெரிக்கா திரும்ப விருப்பம் தெரிவித் துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அவர்களை மீட்பதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசிக்கப் பட்டு வருவதாகவும் தெரிவித்து உள்ளார்.
No comments:
Post a Comment