சிட்னி, அக். 30- ஆஸ்திரேலி யாவில் 29 ஆண்டுகளுக்கு முன், சிறையில் இருந்து தப்பித்த குற்றவாளி, கரோனா ஊரடங்கினால் வருமானம் இன்றி வறு மையில் வாடியதால் காவல்துறையில் சரண் அடைந்தார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்த டார்கோ டேசிக் என்ப வர், கஞ்சா செடி வளர்த்த குற்றத்திற்காக 1992இல் கைது செய்யப்பட்டார். இவருக்கு 33 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித் தது. சிறையில் 19 மாதங் களை கழித்த டார்கோ, அங்கிருந்து தப்பினார். சிட்னியின் வடக்கு புறநக ரின் கடற்கரை பகுதியில் பதுங்கி வாழ்ந்து வந்தார். பின், அதே பகுதியில் வீடு மராமத்து பணிகளை செய்து வந்தார்.
கடந்த 29 ஆண்டுக ளாக காவல்துறையிடம் சிக்காமல் சுதந்திரமாக வாழ்ந்தார். ஆஸ்திரேலி யாவில் 'டெல்டா' வகை கரோனா பரவல் அதிக ரித்ததை அடுத்து, ஜூன் முதல், கடந்த 11ஆம் தேதி வரை முழு ஊரடங்கு போடப்பட்டது. அந்த நேரத்தில், டார்கோவின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டு பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட்டது.
சிறை சென்றாலாவது மூன்று வேளை உணவு கிடைக்கும் என எண் ணிய டார்கோ, காவல் நிலையம் சென்றார். அங்கு 29 ஆண்டுகளுக்கு முன் சிறையில் இருந்து தப்பித்த கதையை கூறி னார். சிறைத் தண்ட னையை முழுவதுமாக அனுபவிக்க தயாராக உள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தப்பட் டார்.டார்கோவின் கதையை கேட்ட நீதிபதி, மீதமுள்ள 14 மாத சிறைத் தண்டனையுடன் மேலும் இரண்டு மாதங்கள் சேர்த்து 16 மாதங்கள் சிறை தண்டனை அனு பவிக்கும்படி தீர்ப்பளித்தார்.
No comments:
Post a Comment