வாசிங்டன், அக். 30- சமூக வலைதளங்களில் முன்ன ணியில் உள்ள 'பேஸ்புக்' கின் பெயர் விரைவில் மாற்றப்பட இருப்பதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில் நியூயார்க்கில் நடை பெற்ற ‘பேஸ்புக்’ ஆண்டு கூட்டத்தின்போது, பேசிய அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் , பேஸ்புக் நிறுவனத்தின் பெயரை ‘மெட்டா’ என மாற்றி உள்ளதாகத் தெரிவித்தார்.
‘சமூக பிரச்சினைகளு டன் போராடி நிறைய கற்றுக் கொண்டதாகவும், அது அனைத்தையும் கொண்டு புதிய அத்தி யாயத்தை உருவாக்கி இருப்பதாகவும் தெரிவித் தார். தற்போது நிறுவனத் தின் பெயர் மட்டுமே மாற்றப் பட்டுள்ளதாக வும், தங்கள் ‘ஆப்’களும், அவற்றின் பிராண்டுக ளும் மாறவில்லை என வும், மார்க் ஜக்கர்பெர்க் தெரிவித்துள்ளார் .
எதிர்கால இணைய தளம் மெய்நிகர் உலக மாக மாறும் என்பதால், இந்த பெயரை தேர்ந் தெடுத்திருப்பதாக மார்க் ஜூக்கர்பெர்க் அறிவித்து உள்ளார்.
மெய்நிகர் இணைய உலகமான ‘மெட்டா வெர்ஸ்’ நோக்கி பேஸ்புக் நிறுவனம் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருவதாகவும், அதனை பிரதிபலிக்கும் வகையில், நிறுவனத்தின் பெயரை மெட்டா என மாற்றியுள் ளதாகவும் தகவல் வெளி யாகியுள்ளது.
பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், மெசஞ்சர் செயலிகளின் பெயர் அப்படியே தொட ரும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment