கரோனா விதிமுறைகளை மீறிய ரயில்வே பயணிகளிடம் ரூ.35.47 கோடி அபராதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 15, 2021

கரோனா விதிமுறைகளை மீறிய ரயில்வே பயணிகளிடம் ரூ.35.47 கோடி அபராதம்

சென்னை, அக்.15 கரோனா விதிமீறலில் ஈடுபட்ட பயணிகளிடம் கடந்த 6 மாதத்தில் ரூ.35.47 கோடி அபராதம் வசூலாகி உள் ளது என தெற்கு ரயில்வே தெரிவித்து உள்ளது.

நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கரோனா பாதிப்புகளை முன்னிட்டு அரசு பல் வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.  இந்த நிலையில், ரயிலில் பய ணம் செய்யும் நபர்களுக்கு என வழிகாட்டு நெறி முறைகள் வகுத்து வெளியிடப்பட்டு உள்ளன.

அதனை மீறுபவர்க ளுக்கு அபராதம் விதிக் கப்படும் என்றும் எச்ச ரிக்கை விடப்பட்டு இருந் தது.  இந்த நிலையில், கரோனா பரவலை கட் டுப்படுத்த விதிக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறை களை பின்பற்றாத பயணி களிடம் அபராதம் வசூல் செய்யப்பட்டு உள்ளது.

இதுபற்றி தெற்கு ரயில்வே வெளியிட் டுள்ள செய்தியில், நடப்பு ஆண்டு ஏப்ரலில் இருந்து அக்டோபர் வரையி லான காலகட்டங்களில், பயணத்தின்போது கரோனா விதிமீறலில் ஈடுபட்ட பயணிகளிடம் ரூ.35.47 கோடி அபராதம் வசூலாகி உள்ளது என தெரிவித்து உள்ளது.

இவற்றில் முகக் கவசம் அணியாததற்காக ரூ.1.63 கோடி வசூல் செய்யப் பட்டு உள்ளது என்றும் தெரிவித்து உள்ளது.

No comments:

Post a Comment