வரதட்சணைக் கொடூரத்தால் மனிதநேயத்தை தொலைத்த கேவலம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 15, 2021

வரதட்சணைக் கொடூரத்தால் மனிதநேயத்தை தொலைத்த கேவலம்!

பாம்பைக் கொண்டு மனைவியைக் கொன்ற வழக்கு

கணவனுக்கு இரட்டை ஆயுள், 17 ஆண்டு சிறை: நீதிமன்றம் தீர்ப்பு

கொல்லம், அக். 15- கேரளாவில் மனைவியை பாம்பை கடிக்க வைத்து கொலை செய்த கணவர் சூரஜுக்கு இரட்டை ஆயுள் மற்றும் 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கொல்லம் நீதிமன்றம் தீர்ப் பளித்து உள்ளது

கேரள மாநிலம் அடூரை சேர்ந்தவர்  சூரஜ் (வயது 27) தனியார் வங்கி ஒன்றில் பணி புரிந்து வந்தார். இவரது மனைவி உத்ரா (வயது 22). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது.

திருமணத்தின் போது உத்ராவின் பெற்றோர் 784 கிராம் தங்க நகைகள் மற்றும் ஒரு காரை வரதட்சணையாக வழங்கி  உள்ளனர். இந்த நிலை யில் சூரஜ் கூடுதல் வரதட்சணை கேட்டுள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் மே 7ஆம் தேதி காலை, உத்ரா தனது பெற்றோர் வீட்டில் படுக்கைய றையில் பிணமாக கிடந்துள் ளார். உத்ராவின் தந்தை விஜய சேனன் தாய்  மணிமேகலா, தங்கள் மகளை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர்கள் உத்ரா விஷப் பாம்புகடித்து இறந்து விட்டதாக கூறி உள்ளனர். அவர்கள் வீட்டிற்கு திரும்பி வந்தபோது,  படுக்கையறையில் ஒரு அலமாரியின் கீழ் விஷப் பாம்பை கண்டனர். பாம்பு கொல் லப்பட்டு அவர்களது வீட் டின் பின்னால் புதைக்கப்பட்டது.

மே 7ஆம் தேதி மகள் மர ணம் குறித்து சந்தேகம் இருப் பதாக உத்ராவின் பெற்றோர் கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.காவல்துறையினர் சூரஜை கைது செய்து விசா ரணை நடத்தியபோது தன் மீதான குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

இது தொடர்பான வழக்கு கொல்லம் ஆறாம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த குற்றத்தை "அரிதி லும் அரிதான வழக்கு" என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.

சூரஜுக்கு மரண தண் டனை வழங்க வேண்டும் என்று அரசு தரப்பு கோரியது இது மிகவும் அரிதான நிகழ்வு களில் ஒன்றாகும். என்று அரசு தரப்பு நீதிமன்றத்தில் வாதிட்டு இருந்தது.

மேலும் தண்டனையின் விவரம் 13.10.2021அன்று அறி விக்கப்படும் என நீதிமன்றம் கூறியது. அதை தொடர்ந்து அக்.13இல் தண்டனை விவரங் களை நீதிபதி அறிவித்தார்.

அதன்படி. கொல்லம் கூடு தல் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி எம்.மனோஜ்  ஆயுள் தண் டனை வழங்கி தீர்ப்பளித்தார். சூரஜுக்கு  இரட்டை ஆயுள், ரூ.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

இந்திய தண்டனைச் சட் டப் பிரிவுகள் 302, 307, 328, 201 ஆகிய பிரிவுகளின்கீழ் சூரஜ்  குற்றவாளி எனக் கூடுதல் நீதி பதி எம்.மனோஜ் உறுதி செய் தார்.

அதில், “உத்ராவைக் கொலை செய்தமைக்காக சூரஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனை யும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும், பாம்பைக் கடிக்க வைத்தது, ஆதாரங்களை அழிக்க முயன்ற பிரிவுகளில் முறையே 7 ஆண்டு கள், 10 ஆண்டுகள் சிறை தண் டனையும் விதிக்கப்பட்டது. இரட்டை ஆயுள் தண்டனை முடிந்தபின் அதன்பின் 17 ஆண்டுகள் சிறை தண்ட னையை சூரஜ் அனுபவிக்க வேண்டும். ஏக காலத்தில் அனு பவிக்கக் கூடாதுஎன்று நீதிபதி தீர்ப்பளித்தார்.

இதனால் சூரஜின் எஞ்சி யுள்ள வாழ்க்கை முழுவதும் சிறையில்தான் கழிக்க வேண் டியது வரும் எனத் தெரிகிறது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப் படுவதை அடுத்து, உத்ராவின் பெற்றோர் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர். நீதிபதி அளித்த தீர்ப்பு தங்களுக்கு மனநிறை வைத் தரவில்லை என்றும், அதிகபட்ச தண்டனையாகத் தூக்கு தண்டனை கிடைக்கும் என்றும் எதிர்பார்த்தோம் எனத் தெரிவித்தனர். சூரஜுக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க மேல்முறையீடு செய்வோம் என உத்ராவின் தந்தை விஜய சேனன், சகோதரர் விஸ்ணு ஆகியோர் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment