சென்னை, அக். 13- சென்னை கண் ணகி நகரில் நேற்று (12.10.2021) கலைஞரின் வருமுன் காப் போம் திட்டத்தின் மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தென் சென்னை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன், சோழிங்கநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த்ரமேஷ் ஆகி யோர் உடன் இருந்தனர்.
பின்னர் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 1,250 மருத்துவ முகாம்கள் நடத்திட திட்டமிட்டு, சேலம் மாவட்டம் வாழப்பாடியில் கடந்த மாதம் 29ஆம் தேதி கலைஞரின் வருமுன் காப் போம் திட்டத்தை முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் தமிழ் நாட்டின் அனைத்து மாவட் டங்களிலும் 50 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடந்து உள்ளது. இந்த முகாம்களில் பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. பல பரி சோதனைகள் செய்யப்படு கின்றன. மேல் சிகிச்சைகள் தேவைப்படுபவர்கள் மருத்து வமனைகளுக்கு பரிந்துரை செய்து உயர் சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.
இந்த முகாம்களில் கரோனா தடுப்பூசியும் போடப்படுகிறது. டெங்கு காய்ச்சல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் இந்த ஆண்டு மட்டும் 3 ஆயிரத்து 90 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தற்போது 362 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கரோனா வால் இறந்த மருத்துவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அறிவிப்பு வெளியிட்டதோடு நில் லாமல் தற்போது 4 மருத்து வர்களுக்கு இழப்பீடு வழங் கப்பட்டுள்ளது. எவ்வளவு பேர் இன்னும் இருக்கிறார்கள் என்பதை முழுவதுமாக கணக் கெடுக்கும் பணிகள் நடை பெற்று வருகிறது. அவை வந்த வுடன் முழுமையாக அவர்க ளுக்கு வழங்கப்படும். மருத்துவ களப்பணியாளர்களான மருத் துவர்கள், நர்சுகளுக்கு ஊக்கத் தொகைகள் வழங்கவும் முதல மைச்சர் அறிவித்துள்ளார்.
கரோனாவால் பாதிக்கப் பட்டவர்கள் மட்டுமல்லாமல், அந்த துறையில் உள்ள அனை வரையும் பட்டியலில் சேர்த்து விட்டார்கள். எனவே கரோ னாவால் பாதிக்கப்பட்ட உண் மையானவர்களை கண்டறியும் பணி நடைபெறுகிறது. இன் னும் ஒரு வாரக்காலத்துக்குள் அப்பணி முடிந்துவிடும். மருத் துவ களப்பணியாளர்களுக்கு ஊக்கத்தொகைகள் வழங்கு வதை முதலமைச்சர் தொடங்கி வைப்பார்.
தற்போது தமிழ்நாட்டில் வெளிப்படை தன்மையுடன் 6 ஆயிரத்து 300 பேருக்கு பணியிட மாற்றம் வழங்கப்பட்டுள் ளது. 30 ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் ‘அவுட் சோர்சிங்’, ஒப்பந்த முறையில் பணியாற்று கின்றனர். அவர்களை பணி வரன்முறைப்படுத்துவது என் பது இயலாது.
தேசிய நலவாழ்வுக் குழுமத் தில் பணியாற்றுகிற தற்காலிக பணியாளர்களுக்கு 30 சதவீதம் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ஆண்டுக்கு ரூ.87 கோடி கூடுதலாக செலவிடப் படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment