காபூல், அக். 7- ஆப்கனிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறிபின் அந்நாட்டைத் தங்கள் பிடிக்குள் தலிபான்கள் கொண்டுவந்தனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசை அகற்றிய தலிபான்கள், இடைக்கால இஸ்லாமிய எமிரேட் அரசை நிறுவப்போவதாக அறிவித்தனர். அதற்கான அமைச்சர வைப் பட்டியலையும் கடந்த செப் டம்பர் 8ஆ-ம் தேதி அறிவித்தனர்.
தலிபான்கள் அறிவித்த அமைச் சரவையில் ஒரு பெண் கூட இல்லை. கடந்த முறையைப் போன்று ஆட்சி இருக்காது, பெண்களுக் கான உரிமைகள் வழங்கப்படும், கல்வி உரிமை, வேலைக்குச் செல் லும் உரிமை போன்றவை வழங் கப்படும் என்று தலிபான்கள் அறிவித்த நிலையில் அமைச்சரவையில் ஒரு பெண் கூட இல்லை.
இந்நிலையில் இணை அமைச் சர்கள் பட்டியலை கடந்த மாதம் 20ஆம் தேதி தலிபான்கள் வெளியிட்டதிலும் ஒரு பெண்ணுக்குக் கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை. “இணை அமைச்சர்கள் பட்டியலில் சிறுபான்மையாக இருக்கும் ஹசரா பிரிவினருக்கு முக்கியத்து வம் வழங்கப்பட்டுள்ளது.
இப்போது அமைத்துள்ள அரசு இடைக்கால அரசு. அமைச்சரவை விரிவாக்கம் இனிவரும் காலங் களில் நடக்கும்போது, பெண்களும் அமைச்சரவையில் சேர்க்கப்படு வார்கள்” என தலிபான்கள் தரப் பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் 3ஆ-வது கட்ட மாக இணைஅமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்பட 38 பேரை தலிபான்கள் நியமித்தனர். இதி லும் ஒரு பெண்ணுக்குக் கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை என் பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment