புதுடில்லி, அக். 7-- கரோனா பரவலை தடுக்க விதிக்கப்பட்ட தடைகள் தளர்த்தப்பட் டதை அடுத்து, தேவைகள் அதிகரித் ததன் காரணமாக, கடந்த செப்டம்பரில், நாட்டின் தயாரிப்பு துறையின் உற்பத்தி வளர்ச்சி அதிகரித்துள்ளது.
‘அய்.எச்.எஸ்., மார்க்கிட் இந்தியா’ எனும் நிறுவனம், உலோகம், ரசாயனம், காகிதம், உணவு, ஜவுளி உள்ளிட்ட எட்டுப் பிரிவுகளைச் சேர்ந்த நிறுவனங் களின், செப்டம்பர் மாத தயாரிப்பு நில வரம் குறித்து ஆய்வு நடத்தி, அறிக்கை வெளியிட்டுள்ளது.அதில் கூறப்பட் டுள்ள தாவது:
நாட்டின் தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி குறியீடு, கடந்த ஆகஸ்டில் 52.3 புள்ளிகளாக இருந்த நிலையில், செப் டம்பரில் 53.7 புள்ளிகளாக அதிகரித்து உள்ளது.
இக்குறியீடு 50 புள்ளிகளுக்கு அதிக மாக இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும். 50 புள்ளிகளுக்கு கீழே இருந் தால், சரிவை குறிக்கும். கடந்த மூன்று மாதங்களாக தேவைகள் அதிகரித்து, வணிகங்கள் தொடர்ந்து மீட்சியை கண்டு வருகின்றன.
மேலும், வெளிநாட்டுக்கான விற் பனையும் உயர்ந்து, வணிக நம்பிக்கையும் அதிகரித்துள்ளது.வரும் மாதங்களில் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும் நிலையில், விற்பனையில் கூடுதல் வளர்ச் சியை எதிர்பார்க்கலாம்.
இவ்வாறு கூறப் பட்டு உள்ளது.
No comments:
Post a Comment