காய்ச்சல், தொண்டை ஒவ்வாமை நோய்களுக்கான 43 மருந்துகள் தரமற்றவை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 26, 2021

காய்ச்சல், தொண்டை ஒவ்வாமை நோய்களுக்கான 43 மருந்துகள் தரமற்றவை

ஒன்றிய தரக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

சென்னை,அக்.26- காய்ச்சல், தொண்டை அலர்ஜி, அஜீரணக் கோளாறு உள்ளிட்ட பிரச்சினை களுக்கான 43 மருந்துகள் தரமற்ற வையாக இருப்பது ஒன்றிய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் விற்பனை செய் யப்படும் மருந்து, மாத்திரைகளை ஒன்றிய, மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்து வருகின்றன. இந்த ஆய்வில் தரமற்ற, போலியானமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப் பட்ட நிறுவனங்கள் மீது நட வடிக்கை எடுக்கப்படுகிறது.

அதன்படி, கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 1,227 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 1,184 மருந்துகளின் தரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் காய்ச்சல், தொண்டை அலர்ஜி, அஜீரண கோளாறுகளுக் கான 43 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது. இந்த மருந்துகள் இமாச்சலப் பிரதேசம், குஜராத், உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக் கப்பட்டுள்ளன.

இந்த தரமற்ற மருந்துகள்பற்றிய விவரங்களை ஒன்றிய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம்தனது இணைய தளத்தில்(https://cdsco.gov.in) வெளியிட்டுள்ளது. சம்பந் தப்பட்ட நிறுவனங்கள் மீது நட வடிக்கை எடுக்கவும் மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது.


No comments:

Post a Comment