வடகிழக்கு பருவமழை தொடங்கியது வானிலை ஆய்வு மய்யம் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 26, 2021

வடகிழக்கு பருவமழை தொடங்கியது வானிலை ஆய்வு மய்யம் தகவல்

சென்னை,அக்.26- தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் வட கிழக்குப் பருவமழை நேற்று (25.10.2021) தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழ் நாட்டில் பரவலாக மழை பெய்யும். பல்வேறு மாவட் டங்களில் கனமழை பெய்யும்.

இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மய்யத்தின் தென்மண் டல தலைவர் எஸ்.பாலச் சந்திரன் செய்தியாளர் களிடம் நேற்று (25.10.221)  கூறியதாவது:

தென்னிந்திய பகுதி களில், குறிப்பாக தமிழ் நாடு, தெற்கு ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை அக்.25ஆம் தேதி (நேற்று) தொடங் கியுள்ளது. இதன் காரணமாக 26ஆம் தேதி தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யவாய்ப்பு உள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, நாமக்கல், கரூர், சேலம் மாவட்டங் களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கன மழையும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங் களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும் பாலான இடங்களில் லேசான மழையும் பெய் யும்.

தெற்கு வங்கக்கடலின் மத்தியப்பகுதியில் 26ஆம் தேதி வளி மண் டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இது மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகு தியாக வலுப்பெறும். இதன் காரணமாக 27ஆம் தேதி திருநெல் வேலி, தூத்துக்குடி, ராம நாதபுரம், விருதுநகர், மதுரை, தென்காசி, கன் னியாகுமரி மாவட்டங் களில் ஓரிரு இடங்களில் இடி,மின்னலுடன் கனமழையும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங் களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பா லான இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

28, 29ஆம் தேதிகளில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயி லாடுதுறை, புதுக் கோட்டை ராமநாதபுரம், விழுப்புரம், கள்ளக் குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்கள், புதுச் சேரி, காரைக்கால் பகுதி களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கன மழையும், உள் மாவட் டங்களில் பெரும்பா லான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் பெரும்பாலான இடங் களில் லேசான மழையும் பெய்யும்.

சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத் துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வங்கக்கடலில் உரு வாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி யால் தெற்கு வங்கக்கடலின் மத்தியபகுதிகளில் மணிக்கு 40 - 60 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசும்.இப்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment