தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 4,900 செவிலியர்கள் விரைவில் நியமனம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 12, 2021

தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 4,900 செவிலியர்கள் விரைவில் நியமனம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

ராமநாதபுரம், அக். 12- ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இலங்கை தமிழர் மறுவாழ்வு மய்யத்தில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமையும், தேவிபட் டினத்தில் தனியார் மஹாலில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை யும் அமைச்சர் மா.சுப்பிரமணி யன் 10.10.2021 அன்று  நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதா வது:

தமிழ்நாடு முழுவதும் 5ஆவது மெகா தடுப்பூசி முகாம் 10.10.2021 அன்று நடைபெற்றது. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை 64 சத வீதம் பேர் முதல் தவணை தடுப் பூசி செலுத்தி உள்ளனர். 24 சதவீதம் பேர் 2ஆவது தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.

தமிழ்நாட்டில் 331 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். உள் ளாட்சி அமைப்புகள் மூலமாக ஏடிஎஸ் கொசுவை அழிக்க நட வடிக்கை எடுக்கப்பட்டு வருகி றது. மருத்துவத் தேர்வு வாரியம் மூலமாக 4,900 செவிலியர்கள் தேர்வு செய்யப்பட்டு தமிழ்நாடு முழுவதும் நியமிக்கப்பட உள்ள னர். இவ்வாறு அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து திண் டுக்கல் மாவட்டத்தில் சின்னா ளபட்டி, ஒட்டன்சத்திரம், வேட சந்தூர் ஆகிய ஊர்களில் நடை பெற்ற கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை அவர் ஆய்வு செய்தார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ரூ.80 லட்சம் மதிப்பில் தனியார் பங் களிப்புடன் அமைக்கப்பட்டுள்ள நிமிடத்துக்கு 600 லிட்டர் உற் பத்தி திறன் கொண்ட ஆக்சிஜன் உற்பத்திக் கலனை அமைச்சர்கள் அய்.பெரியசாமி, அர.சக்கர பாணி, மா.சுப்பிரமணியன் ஆகி யோர் திறந்து வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: தமிழ்நாட்டில் இதுவரை 222 ஆக்சிஜன் உற்பத் திக் கலன்கள் அமைக்கப்பட்டுள் ளன. திண்டுக்கல் மருத்துவ மனையில் ஒரே நேரத்தில் 100 பேருக்கு ஆக்சிஜன் செலுத்தும் வகையில் இந்த ஆக்சிஜன் உற் பத்திக் கலன் அமைக்கப்பட்டு உள்ளது. கரோனா காலத்தில் தற்காலி கமாக நியமிக்கப்பட்ட செவிலியர்கள், உதவியாளர்கள், தூய் மைப் பணியாளர்கள் ஆகி யோரை டிசம்பர் 31ஆம் தேதி வரை பணியில் அமர்த்துமாறு முதலமைச்சர் உத்தரவிட்டு உள்ளார். அவர்களுக்கு நிலுவை யில் உள்ள ஊதியம் உடனடியாக வழங்கப்படும் என்றார்.

No comments:

Post a Comment