சென்னை, அக். 12- வடகிழக்கு பருவமழை காலத்தில் மருத்துவமனைகளுக்கும், குடிநீர் வினியோகத்துக்கும் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக முதன்மை பொறியாளர் என்.கண்ணன். அனைத்து கண் காணிப்பு பிரிவு பொறியாளர்க ளுக்கும் அனுப் பியுள்ள சுற்றறிக் கையில் கூறப்பட்டிருப்பதாவது:
* உட்புற மற்றும் வெளிப்புற துணை மின் நிலையங்களில் மழைநீர் நுழைய வாய்ப்பு உள் ளதால், அதை தவிர்க்கும் வகையில் முன்னெச் சரிக்கை நடவடிக் கையாக சிமெண்டு மூட்டை களை தயாராக வைத்திருக்க வேண்டும்.
* அனைத்து துணை நிலையங்களிலும் மழைநீரை வெளி யேற்றுவதற்காக டீசல் ஜென ரேட்டர்கள் மற்றும் நீர்ப்பாசன குழாய்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்,
* தீயணைப்பு சாதனங்கள், 'எர்த்' கம்பி, 'ஹாலோஜன் விளக்குகள் உள்ளிட்ட பாது காப்பு உபகரணங்கள் தயாராக இருக்க வேண் டும். அவை பயன்படுத்தும் நிலையில் இருப் பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்,
* பேட்டரி, பேட்டரி 'சார் ஜர்'களை சரியாக பராமரிக்க வேண்டும். அவை இருக்கும் அறை களின் வெப்பநிலையும் சீராக இருக்க வேண்டும்.
* மாற்று ஏற்பாடாக'எல்.டி. சப்ளை' வழி முறைகளை கையாள துணை மின் நிலைய ஆபரேட்டர்கள் தயாராக இருக்க வேண்டும்.
* 'டி.சி, சப்ளை 'யில் கசிவு இருக்கிறதா? என்பதை கண்கா ணிக்க வேண்டும். டிரான்ஸ் பார்மரில் ஆயில் கசிவு குறித்து ஆய்வு நடத்தி சரிபார்த்திட வேண்டும்.
* பச்சோல்ஸ் ரிலே, சி.டி., பி.ஆர்.வி. சேம்பர் உள்ளிட்ட சாதனங்கள் மழைநீரால் பாதிக் காதவாறு மூடி வைக்கப்பட வேண்டும்.
*மீட்டர் அண்ட்ரிலேடெஸ் டிங் (எம்.ஆர்.டி.) குழுவினர். தங்கள் எல்லைக்கு உட் பட்ட துணை மின் நிலையங்களில் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
* நீர் மட்டம் அதிகரிக்கும் போது பொது மக்களின் பாது காப்பை உறுதி செய்யும் வகை யில் பில்வர் பாக்ஸ்கள் மற்றும் டிரான்ஸ்பார் மர்கள் தனிமைப் படுத்தப்பட்டால், உடனடியாக மின்ன கத்துக்கு (9498794987) தகவல் தெரி விக்கப்பட வேண்டும்.
* அவசர காலங்களின் போது பயன்படுத்த ஏதுவாக 'போல்ஸ், கண்டக்டர்ஸ், டிரான்ஸ்பார் மர்ஸ்'உள்ளிட்ட சாதனங்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
* கிரேன், லாரி மற்றும் ஜே.சி.பி ஆகியவை பேரிடர் காலத்தில் கிடைக்கும்படிமுன் கூட் டியே தெரிவிக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவாக னங்களின் உரிமையாளர்களின் தொடர்பு எண் கள் அனைத்து பிரிவு அதிகாரிகளுக்கும் உட னடியாக கிடைக்க நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும்.
* தொலைத் தொடர்பு அலுவலகங்கள், மருத்துவமனைகள், முக்கிய அரசு அலுவல கங்கள், கழிவுநீர் உந்தி நிலையங்கள், மேல்நிலை தொட்டிகள், குடிநீர் வினியோகம் ஆகியவற் றுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க நட வடிக்கை மேற் கொள்வது அவசியம்,
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் மற்றும் வானிலை ஆய்வு மய்யம் வழங்கும் அறிவுறுத்தல் களை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
* இயற்கை பேரிடர் காரணமாக மின்வாரி யத்தின் உள்கட்டமைப்புக்கு ஏற்படும் சேதங் களுக்கு நிதி ஒதுக்கீடு கோர ஒளிப்படங்களுடன் முறையாக ஆவணப்படுத்தப்பட வேண்டும்.
மேற்கண்ட உத்தரவுகளை கடை பிடிக்கும் போது அனைத்து அதிகாரிகளும், ஊழியர் களும் கரோனா விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்,
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment