காபூல், அக்.8 ஆப்கானிஸ்தானில் 4 அய்.எஸ். பயங்கரவாதிகளை தலிபான்கள் கைது செய்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான் களின் ஆட்சி நடைபெற்று வரு கிறது. தலிபான்களின் ஆட்சிக்கு எதிராக அய்.எஸ்.அய்.எஸ். பயங்கர வாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. அய்.எஸ். அமைப்பு பொது மக்கள் மற்றும் தலிபான்களை குறிவைத்து அவ்வப்போது தாக்கு தல் களை நடத்தி வருகின்றனர். இதனால், தலிபான்களுக்கும், அய். எஸ். பயங்கரவாதிகளுக்கும் இடை யே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் தலிபான்களை குறிவைத்து அய்.எஸ். பயங்கர வாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் தலிபான்கள் உள்பட பலர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து அய்.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையில் தலி பான்கள் களமிறங்கியுள்ளனர்.
இந்நிலையில், அந்நாட்டின் தலைநகர் காபூலில் தலிபான்கள் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையில் அய்.எஸ். பயங்கர வாதிகள் 4 பேர் கைது செய்யப் பட்டனர். கைது செய்யப்பட்ட அய்.எஸ். பயங்கரவாதிகளிடமிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக தலிபான்கள் செய்தித்தொடர்பாளர் ஷபிகுல்லா முஜாகித் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அந்நாட்டின் நஹாங்கர் மாகாணம் ஜலாலாபாத் மாவட்டத்தில் உள்ள சந்தைப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தலிபான் களை குறிவைத்து அய்.எஸ். பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 2 தலிபான்கள் உயிரிழந்தனர்.
மேலும், பொது மக்களில் 3 பேர் படுகாய மடைந்தனர்.
No comments:
Post a Comment