சென்னை,அக்.9- சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கங்காத ரேஸ்வரர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு 7.10.2021 அன்று ஆய்வு செய்தார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
அறநிலையத் துறை சார்பில் புதிதாக 10 கல்லூரிகள் தொடங்கப் படும் என்று பேரவையில் அறிவித்தோம். இதில் 4 கல்லூரிகளுக்கு உயர்கல்வி துறையின் அனுமதி கிடைத்துள்ளது. சென்னை கொளத்தூரில் கல்லூரி தொடங்க பூம்புகார் நகரில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கோயில் களில் வழிபட பணம் வசூலிப் பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கோயில்களுக்கு பக்தர்கள் எளிதாக நன்கொடை அளிக்க இணையதளம் தொடங் கப்படும். தமிழ்நாட்டில் சில கோயில்களின் பெயர்கள் சமஸ்கிருதத் தில் உள்ளன. இதுகுறித்து தீர ஆய்வு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதியுடன் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய 2 மொழிகளிலும் அழைக்க நட வடிக்கை எடுக்கப்படும்.
ஒன்றிய அரசு வழிகாட்டுதல் படியே வெள்ளி, சனி, ஞாயிறு களில் கோயில்கள் மூடப்பட் டுள்ளன. போராட வலுவான காரணம் இல்லாததால் இதை ஒரு கோரிக்கையாக வைத்து பாஜக வினர் போராட்டம் நடத்துகின் றனர். கரோனா தொற்று முழு மையாக குறைந்த பிறகு, வெள்ளி, சனி, ஞாயிறும் கோயில்களை திறக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment