தமிழ்நாட்டில் மேலும் 10 அரசு கல்லூரிகளில் மின் நூலகங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 9, 2021

தமிழ்நாட்டில் மேலும் 10 அரசு கல்லூரிகளில் மின் நூலகங்கள்

சென்னை,அக்.9- தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கல்லூரிகளிலும் நூலகங்கள் இயங்கி வரும் நிலையில், கூடுதலாக சென்னை மாநிலக் கல்லூரி, ராணி மேரி மகளிர் கல்லூரி, காயிதே மில்லத் மகளிர் கல்லூரி, நீலகிரி, வேலூர், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, கோவை அரசு கல்லூரிகள் உட்பட 17 கல்லூரிகளில் மின் நூலகங்கள் (டிஜிட்டல் லைப்ரரி) இயங்கி வருகின்றன.

நூலக வளாகத்திலேயே தனிஅறை அமைக்கப்பட்டு 10 கணினிகளுடன் மின் நூலக வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவை கல்லூரி இயங்கும் நேரத்தில் செயல்படும். மின் நூலகத்தில் மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பிரத்யேக அடையாள எண், கடவுச்சொல்லை பயன்படுத்தி தேவையான புத்தகங்களை வாசிக்கலாம். தேவையான பக்கங்களை பென்டிரைவ்வில் பதிவுசெய்து கொள்ளலாம். இ-மெயிலிலும் அனுப்பலாம். இந்த 17 மின் நூலகங்களில் ரூ.85 லட்சம் செலவில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இந்நிலையில், சென்னை வியாசர்பாடி, தருமபுரி, பரமக்குடி, அரியலூர், முசிறி, விழுப்புரம், சிவகங்கை, கும்பகோணம், திண்டுக்கல், திருநெல்வேலியில் உள்ள 10 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் தலா ரூ.10 லட்சம் செலவில் மின் நூலகங்கள் அமைக்கப்பட உள்ளன.

அரசுக்கு இதற்கான கருத்துரு அனுப்பப்பட்டு, நவம்பரில் மின் நூலகங்கள் அமைக்கப்படும் என்று மாநில கல்லூரிக் கல்வி இயக்கக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அய்அய்டியில்  டிப்ளமோ படிப்புகள்

நவ.15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை,அக்.9- புரொகிராமிங், டேட்டா சயின்ஸ் பாடங்களில் புதிதாக 2 ஆன்லைன் டிப்ளமோ படிப்புகளை சென்னை அய்அய்டி அறிமுகம் செய்துள்ளது.

மாணவர்கள், வேலை தேடுபவர்கள், பணியாற்றுவோர் பயன்பெறும் வகையில் டிப்ளமோ இன்புரொகிராமிங், டிப்ளமோ இன் டேட்டா சயின்ஸ் ஆகிய 2 ஆன்லைன் டிப்ளமோ படிப்புகளை சென்னை அய்அய்டி அறிமுகம் செய்துள்ளது. இது 8 மாதப் படிப்பாகும். இதில் சேர பொறியியல், கணினி அறிவியல் பின்புலம் அவசியம் இல்லை. ஏதேனும் ஒரு பாடத்தில் பட்டம் பெற்றவர்கள் சேரலாம்.

இதில் சேர விரும்புவோர் <https://diploma.iitm.ac.in> என்ற இணையதளம் மூலமாக ஆன்லைனில் நவம்பர் 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நுழைவுத் தேர்வு டிசம்பர் 12ஆம் தேதி நடக்க உள்ளது.

No comments:

Post a Comment