"நரக சாகேதத்திலே உள்ளறகள்" என்ற தலைப்பில் மலையாள மொழியில் வெளியான நூலின் தமிழ் வடிவமான ‘நரக மாளிகை’
நூல் குறித்து கோவை வில்வம் அவர்களின் பார்வை.
அன்பு தோழர் கே. சதாசிவன் Sadan Thuckalay தமிழ் வழிப்படுத்திய சுதீஸ் மின்னி மலையாளத்தில் எழுதிய “நரக மாளிகை” புத்தகத்தை இப்போது தான் முழுமையாக வாசித்து முடித்தேன். இந்த புத்தகம் நான்கு மாத காலத்திற்குள் மலையாளத்தில் 7 பதிப்புகள் கண்டது என்றும், 17 பதிப்புகள் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து பதிப்பிக்கப்பட்டு வருகிறது. ஆங்கிலம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பெருத்த வர வேற்பை பெற்றுள்ளது என்றும் குறிப்பிட்டு இருப்பதன் காரணமாக மட்டுமின்றி, ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்குள் இருந்த ஒருவரின் சொந்த அனுபவம் என்ற காரணத்தினாலும் இதை யாரும் வாசிக் காமல் இருக்க முடியாது.
தன்னை ஒரு தேசபக்த இயக்கம் என்று ஆர்.எஸ்.எஸ். பீற்றிக்கொள்ளலாம். ஆனால், எந்தக் காலத்திலும் அவர்கள் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் கிடையாது. தேசிய கொடிக்கு, தேசிய கீதத்திற்கு மரியாதை செலுத்த வில்லை என பொதுஇடங்களில் பலரையும் அவர்கள் தாக்கியிருக்கிறார்கள், வன் முறையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். ஆனால், 1947ஆம் ஆண்டே தாங்கள் மூவர்ணக் கொடியை ஏற்கவும் மாட்டோம், மதிக்கவும் மாட்டோம் என்று வெளிப் படையாக அறிவித்தவர்கள் அவர்கள். கலாச்சார தேசியம் தான் தங்களின் இலக்கு என்று அவர்கள் மார் தட்டிக் கொள் கிறார்கள். உண்மையில் அவர்களுக்கு எந்த கலாச்சாரமும் கிடையாது, தேசியத் தைப் பற்றிய புரிதலும் கிடையாது. தங்கள் சேவக்குகள் எளிமையானவர்கள், நேர்மை யானவர்கள், ஒழுக்கம் நிறைந்தவர்கள் என்றெல்லாம் பீற்றிக் கொண்டு குழந்தை களை அனுப்புங்கள், அவர்களுக்கு ஒழுக் கம் கற்றுத் தருகிறோம் என்று பம்மாத்து செய்வார்கள். ஆனால், அதன் தலைவர் களும், ஊழியர்களும் எத்தனை ஒழுக்கக் கேட்டிலும் நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை தான் கண்ட காட்சிகள் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் சுதீஷ் மின்னி.
இரண்டாம் தலைமுறையாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தோடு தொடர்பு கொள்ள சுதீஷ் மின்னி தனது தாயார் தன்னையும், தனது சகோதரனையும் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் சாகாக்களுக்கு எப்படி அழைத்துச் செல்வார் என்பதிலிருந்து தொடங்குகிறது இந்த நரக மாளிகையின் ஊடான பயணம். கலவரங்களை திட்டமிடுவது, பொருட் களை கொள்ளையடிப்பது, கலவரத்தில் தங்கள் கட்சிக்காரர் கொல்லப்பட்டால் அதற்கு, கொன்ற அமைப்பிடம் விலைபேசி பணம் பெற்றுக் கொள்வது, மாற்று அமைப் பினரை கொல்வதற்காக கையில் வைத் திருந்த வெடிகுண்டு வெடித்து இறந்து போனால் அதை மாற்று அமைப்பைச் சேர்ந்தவர்கள் வெடிகுண்டு வீசி தங்கள் அமைப்பினரை கொன்று விட்டார்கள் என்று கலவரத்தில் ஈடுபடுவது, இவற்றை யெல்லாம் எந்த குற்ற உணர்வும் இன்றி இன்னும் சொல்லப்போனால் அவற்றை யெல்லாம் வேத வாக்காக கருதி செயல்பட வைப்பது என்பதை ஆர்.எஸ்.எஸ். தன் ஊழியர்களுக்கு எப்படி புகட்டியிருக்கிறது என்பதை துல்லியமாக சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர்களோடு தனது அனுப வத்தை பதிவு செய்திருக்கிறார்.
இயக்கத்திற்காக 'தியாகி'யானவர்களின் இணையர்களுக்கு உதவி செய்கிறோம் பேர்வழி என்று இரவு நேரங்களில் அந்த வீடுகளுக்குச் சென்று அவர்கள் நடத்துகிற ‘கலாச்சார திருவிழாக்களை’ அவர் பட்டிய லிட்டிருக்கிறார். விநாயகரைக் கூட பழங் குடியினர் வணங்கக் கூடாது என்று புதிய தொரு தீட்டை ஆர்.எஸ்.எஸ். புகுத்துகிறது. அதை ஏற்க மறுத்த அந்த கோயிலை எப்படி தீ வைத்துக் கொளுத்துகிறது என்ப தெல்லாம் இடப்பெயர்களுடன் பதிவு செய் யப்பட்டிருக்கிறது.
ஒரு ஊரில் இஸ்லாமியர்களை குறி வைத்து ஒரு தாக்குதல் நடைபெறுகிறது. சில இடங்களில் செல்வந்தர்களாக உள்ள இஸ்லாமியர்கள் வீடுகளுக்கு முன்பு ஆர். எஸ்.எஸ்காரர்கள் அந்த வீடுகளை யாரும் தாக்கிவிட முடியாதவாறு காவல் காத்து நிற் கிறார்கள். இதுவரை கேள்விப்படும்போது எல்லோருக்கும் ஆர்.எஸ்.எஸ். என்கிற இயக்கம் எத்தனை நேர்மையானது என்று தோன்றும். அடுத்து ஊர்வலம் முடிந்த பிறகு இப்படி காத்து நின்ற ஆர்.எஸ்.எஸ்.சின் முக்கியமான நிர்வாகிகள் எல்லாம் அந்த வீடுகளில் பூட்டை உடைத்து பணத் தையும், மதிப்புமிக்க பொருட்களையும், நகைகளையும் அள்ளிச்சென்று பங்கிட்டுக் கொண்டது பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
ஒரு ஊரில் ஒற்றுமையாக இருக்கும் மக்களை பிளவுபடுத்துவது எப்படி?. மாட்டின் தலையை வெட்டி கோவிலில் வீசியெறிந்து ஊரை பதற்றம் அடையச் செய்து இஸ்லாமியர்களை தாக்கச் செய்வது எப்படி? என்று வகை, வகையாக அவர் களிடம் திட்டம் இருக்கிறது. அழுகிப்போன மூளைகள் என்று சொல்வது மிகவும் குறை மதிப்பீடு செய்வதாகும். இவர்களுடைய மூளைகள் அதற்கும் மேலே. அழுகி நஞ்சாகி, நஞ்சாகவே இறுகிப் போகும் மூளைகள் இவர்களுடையது என்பதற்கு ஏராளமான நிகழ்ச்சிகளை சுதீஷ் மின்னி தன் நேரடி அனுபவத்தின் மூலம் பதிவு செய்திருக்கிறார்.
உலகிலேயே குருதட்சணை என்ற பெயரில் மிக அதிகமாக பணம் வசூலிக்கும் அமைப்பு ஆர்.எஸ்.எஸ். தான். அவரு டைய கணக்குப் படி குஜராத்தில் மட்டும் ஆண்டுக்கு 1000 கோடி ரூபாய் இப்படி வருகிறது. இதைத்தவிர பெரும் பணக் காரர்கள் உயர் பொறுப்புகளில் உள்ள அதிகாரிகள் இவர்களையும் வளைத்துப் போட்டு வசூலித்துக் கொள்ளையடிக் கிறார்கள். ஆடம்பர வாழ்க்கை, மதுப் பிரியம், விபச்சாரம், விபச்சாரத்திற்கு என்றே பெண்களை அழைத்து வருவது என்று அவர்களின் கலாச்சார தேசியம் கைக்கொட்டிச் சிரிக்கிறது. சிறுபான்மை யினர் நடத்தும் பள்ளிகளுக்குள் எப்படி தந்திரமாக நுழைவது, பெண்களை பயன்படுத்தி இதர மதங்களை ஆபாசமாக சிக்க வைத்து மிரட்டி பணிய வைப்பது எப்படி என்றெல்லாம் ஏகத்திற்கும் இறுகிப் போன நஞ்சு மூளைகள், இடையறாது வேலை செய்து கொண்டே இருக்கின்றன.
இவற்றோடு கூடவே பெருமுதலாளி களோடு இவர்கள் எத்தனை உறவோடு இருக்கிறார்கள் என்பதையும் சுதீஷ் மின்னி போகிற போக்கில் பதிவு செய்திருக்கிறார். நாக்பூர் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் ஒரு வார பயிற்சி நடக்கிறது. அந்த பயிற்சியில் யோகா வகுப்பிற்கு தலைமை தாங்குகிறவர் அதானி. ஆம். சாட்சாத் பெரு முதலாளி அதானி தான். அவரும் ஆர்.எஸ்.எஸ்.காரராம். ஒரே மதம் என்று பேசிக்கொண்டு இந்தியாவில் பல பகுதிகளில் ஜாதிக்கு ஒரு சாகா வைத்திருப்பதையும் சொல்லப்போ னால் ஜாதி அடுக்குகளை பாதுகாப்பதற்காக அவர்கள் செய்கிற பணிகளையும் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்.
இப்படிச் சொல்லிக்கொண்டே போக முடியும். ஆயினும், இந்த புத்தகத்தை ஒவ் வொருவரும் வாங்கி வாசிக்க வேண்டும். பின்பற்றுவதற்காக சில புத்தகங்களை நாம் பரிந்துரைப்போம். ஆனால் எப்படி இருக் கக் கூடாது என்பதற்கான மிக முக்கியமான புத்தகமாக இது திகழ்கிறது. இந்த புத்தகத்தை தன் குடும்பத்தில் உள்ளவர் களுக்கும், குழந்தைகளுக்கும் கட்டாயம் வாசிக்க கொடுக்க வேண்டும்.
எல்லா இயக்கங்களும் மனிதனை நேசிக்க கற்றுக் கொடுக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ். மட்டும் தான் மனிதர்களை வெறுக்கவும், கொலை செய்யவும் கற்றுக் கொடுக்கிறது. அதைக் கொண்டாடவும் செய்கிறது. அதை தன் சொந்த அனுபவத் தின் மூலம் கண்டுணர்ந்து அந்த நரக மாளி கையில் இருந்து வெளியேறிய மனிதனின் அனுபவம் இது.
தோழர் சதாசிவன் மிக கவனமாகவும், நேர்த்தியாகவும் கடின உழைப்பை செலுத்தி மொழிபெயர்த்திருக்கிறார். தடை படாத வாசிப்புக்கு உதவும் மொழியாக்கம். அவருக்கு நமது பாராட்டுக்கள். இது ஒரு முக்கியமான அரசியல் பணி.
அனைவரும் வாங்குகள், அவசியம் வாசியுங்கள். இதை ஒரு இயக்கமாகவே கொண்டு செல்லுங்கள்.
"நரக சாகேதத்திலே உள்ளறகள்" என்ற தலைப்பில் மலையாள மொழியில் வெளி யான நூலின் தமிழ் வடிவ நரக மாளிகை.
வெளியீடு:
பரிசல் புத்தக நிலையம், 235 எம்.ஜி.ஆர். முதல் தெரு, எம்.எம்.டி.ஏ., காலனி, அரும்பாக்கம், சென்னை - 600 106.
போன்: 9382853646, 8825767500
சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் புத்தக நிலையத்திலும்
இந்த புத்தகம் கிடைக்கிறது.
தகவல்: குடந்தை கருணா
No comments:
Post a Comment