புதுடில்லி, அக். 28- ஒன்றிய பாஜக அர சின் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் விவசாயிகள் போராடி வருகின்றனர்.
டில்லி எல்லையில் விவசாயி களின் போராட்டம் ஓராண்டை எட்டும் நிலையில், கடந்த 3.10.2021 அன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்கிம்பூர் பகுதியில் போராடிய விவசாயிகள்மீது ஒன்றிய பாஜக இணையமைச்சரின் மகன் காரை ஏற்றிய கொடுஞ்செயல் அரங்கேறி யது.போராடும் விவசாயிகள் படு கொலை செய்யப்பட்ட நிகழ்வின் தொடர்ச்சியாக வன்முறை வெடித் தது. 8 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து உச்சநீதிமன்றம் விசாரணை மேற் கொண்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் கடும் கண்ட னத்தை அடுத்து 11.10.2021 அன்று அமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ரா கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஹிமா கோலி அடங் கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கின் நிலை குறித்த இரண்டாவது அறிக்கையை உத்த ரப் பிரதேச அரசு தாக்கல் செய்தது. உத்தரப்பிரதேச அரசு சார்பில் ஆஜ ரான மூத்த வழக்குரைஞர் ஹரிஷ் சால்வே, சம்பவம் தொடர்பாக 28 பேர் சாட்சிகளாக உள்ளனர் என்றார். அப்போது, குறுக்கிட்ட நீதிபதிகள் சம்பவம் நடைபெற்ற இடத்தில் நான்காயிரம் முதல் அய்ந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர். இவர்களில் 23 பேர்தான் நேரில் கண்ட சாட்சிகளா என்று அதிர்ச்சியும் வியப்பும் மேலிட கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த வழக்குரைஞர் ஹரிஷ் சால்வே, சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் மிக நெருக்க மாக இருந்தவர்கள் மற்றும் கார் களையும் வாகனங்களில் இருந்தவர் களையும் பார்த்தவர்கள் இந்த 23 பேரில் உள்ளனர். சம்பவத்தைத் தொடர்ந்து பல்வேறு காட்சிப் பதிவுகள்எங்களுக்குக் கிடைத்துள் ளன. இந்த காட்சிப்பதிவுகள் பெறப் பட்டு சரிபார்க்கப்பட்டு சான்றளிக் கப்பட்டு தரப்படும் என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி சூர்யகாந்த், இந்த வழக்கு உத்தரப் பிரதேச அரசின் வழக்கு என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். சம் பவம் நடைபெற்ற இடத்தில் 4,000 முதல் 5,000 பேர் இருந்தனர். அவர் கள் உள்ளூர்வாசிகள். ஆனால் அந் தச் சம்பவத்திற்குப் பிறகும் அவர் கள் சாட்சியம் அளிக்க முன்வரத் தயங்குகிறார்கள். உள்ளூர் மக்களை நீங்கள் அணுகுவது, அடையாளம் காண்பது என்ன உங்களுக்கு பெரிய பிரச்சினையாகவா இருக்கப் போகி றது எனக் கேள்வியெழுப்பினார். திரண்டிருந்தவர்களில் சிலர் வேண்டுமானால் தீவிர சாட்சிகளாக இருக்கமாட்டார்கள். ஆனால், சம் பவத்தை நேரில் பார்த்ததை சொல் லக் கூடியவர்களை நீங்கள் கண்டு பிடிக்க வேண்டும் என்றும் உத்தர விட்டார் நீதிபதி சூர்யகாந்த். தொடர்ந்து வாதாடிய வழக்குரை ஞர் சால்வே சட்டப்பிரிவு 164-இன் கீழ் இதுவரை சாட்சியம் அளித்த வர்களின் அறிக்கைகளில் சிலவற்றை சீல் வைக்கப்பட்ட கவரில், வைத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ள தாகக் கூறினார். அப்போது குறுக் கிட்ட நீதிபதி சூர்யகாந்த், “காவல் துறை விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும். நம்பகமான வாக்குமூலங் களை அளிக்கக்கூடிய சாட்சிகளை கண்டுபிடிக்க வேண்டியது அரசின் கடமை” என்றார்.
இந்த 23 சாட்சிகளைத் தவிர வேறுயாருமில்லையா? எனக் கேள்வி யெழுப்பிய தலைமை நீதிபதி என்.வி. ரமணா “எங்களுக்கு ஒரு பயம் இருக்கிறது, அது என்ன வென்று உங்களுக்குத் தெரியுமா?” என்றார். அதற்கு அரசு வழக்குரை ஞர் சால்வே, “நடைபெற்ற சம்பவத் தில் விவசாயி கள் கொல்லப்பட்டனர் என்பதில் சந்தேகமில்லை” என்றார். அப் போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி ரமணா, “காயமடைந்த சாட்சிகள் யாராவது இருக்கிறார்களா” என்றார். அதற்கு சால்வே, உயிரிழந் தவர்கள் விவரங்கள் மட்டுமே உள் ளது என்றார். மீண்டும் தலைமை நீதிபதி சம்பவத்தில் “ஒரு சாட்சி கூட காயமடையவில்லையா” என்று கேள்வியெழுப்பினார். சிறிது நேரம் தயங்கிய வழக்குரைஞர் சால்வே, “காயமடைந்த சாட்சிகள் உள்ள னர். அவர்களில் ஒருவர் அல்லது இருவர் பிரிவு 164-இன் கீழ் வாக்கு மூலம் அளித்துள்ளனர்'' என்றார். தொடர்ந்து நீதிபதிகள்.
“இன்னும் பல சாட்சிகளிடம் வாக்குமூலங்கள் பெறவேண்டும். வாக்கு மூலங்களைப் பதிவு செய்ய போதுமான கீழமை நீதிமன்ற நடு வர்கள் இருப்பதை மாவட்ட நீதிபதி உறுதி செய்ய வேண்டும்” என்றனர். சம்பவத்தின் போது சேகரிக்கப்பட்ட ஆதாரங் களை தடயவியல் துறைக்கு அனுப்ப வேண்டும் எனவும் உத்தர விட்டனர். சாட்சிகளின் பாதுகாப்பு கருதி ஏற்கெனவே அவர்களுக்கு காவல்துறை பாது காப்பு அளிக்கப் பட்டுள்ளது. சிசிடிவி பொருத்தப் பட்டுள்ளது என அரசுத் தரப்பில் கூறப்பட்டது. இருப்பினும் சாட்சி களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஷியாம் சுந்தர் மற்றும் பத்திரிகையாளர் ராமன் காஷ்யப் கொலை செய்யப் பட்டதாகக் கூறப்படும் வழக்கு விசா ரணையின் தனி நிலை அறிக்கையை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் வலியுறுத்தினர். இதை யடுத்து வழக்கு விசாரணையை நீதிபதி கள் நவம்பர் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மொத்தம் 68 சாட் சிகளில் 23 சாட்சிகள் இருப்பதாக உத்தரப்பிரதேச அரசு இரண் டாவது நிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அவர்களில் 30 பேரின் வாக்குமூலம் மட்டுமே கீழமை நிதிமன்ற நடுவர் முன் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.
No comments:
Post a Comment