ஒன்றிய அரசுக்கு பொதுத்துறை நிறுவனங்கள் 533 கோடி ரூபாய் "டிவிடெண்ட்" வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 28, 2021

ஒன்றிய அரசுக்கு பொதுத்துறை நிறுவனங்கள் 533 கோடி ரூபாய் "டிவிடெண்ட்" வழங்கல்

புதுடில்லி, அக். 28- பொதுத் துறையைச் சேர்ந்த, நான்கு நிறுவனங்கள், ஒன்றிய அரசுக்கு 533 கோடி ரூபாய்டிவிடெண்ட்வழங்கி உள்ளன.

பல நிறுவனங்கள், லாபத்தில் குறிப்பிட்ட தொகையை பங்குதாரர்களுக்கு டிவிடெண்டாக வழங்குவது வழக்கம்.இதன்படி, நடப்பு 2021-2022ஆம் நிதியாண்டில் பொதுத் துறையைச் சேர்ந்த, இர்கான், என்.எச்.பி.சி., கான்கார், இந்துஸ்தான் காப்பர் ஆகியவை, ஒன்றிய அரசுக்கு 533 கோடி ரூபாய்டிவிடெண்ட் வழங்கிஉள்ளன.

இதில் இர்கான், 148 கோடி ரூபாய்; என்.எச்.பி.சி., 294 கோடி ரூபாய் வழங்கியுள்ளன. கான்கார், இந்துஸ்தான் காப்பர் நிறுவனங்கள் முறையே 67 கோடி ரூபாய் மற்றும் 24 கோடி ரூபாய் டிவிடெண்ட் அளித்து உள்ளன.

நடப்பு நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனங்கள் ஒன்றிய அரசுக்கு 8 ஆயிரத்து 572 கோடி ரூபாய் டிவிடெண்ட் வழங்கியுள்ளன. இது தவிர, பொது துறை நிறுவன பங்கு விற்பனையில் ஒன்றிய அரசுக்கு 9 ஆயிரத்து 110 கோடி ரூபாய் கிடைத்து உள்ளது.

No comments:

Post a Comment