மாதந்தோறும் நட்சத்திர காவலர் விருது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 28, 2021

மாதந்தோறும் நட்சத்திர காவலர் விருது

சென்னை காவல் ஆணையர் அறிவிப்பு

சென்னை, அக்.28 சிறப்பாக பணியாற்றும் காவல்துறையிருக்கு ரூ.5 ஆயிரம் வெகுமதியுடன் நட்சத்திர காவலர் விருது வழங்கப்பட உள்ளது என சென்னை காவல்துறை ஆணையர் கூறியுள்ளார்.

சென்னையில் குற்றச்சம்பவங்கள் நேரிடும்போது திறம்பட பணியாற்றி குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யும் காவல்துறையினருக்கு வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் சிறப்பாக பணியாற்றும் காவல்துறையினருக்கு மாதந்தோறும்  நட்சத்திர காவலர் விருது வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை காவல்துறையில் சிறப்பாக மற்றும் மெச்சத்தக்க வகையில் பணியாற்றும் காவல்துறை கூடுதல் காவல்துறை ஆணையர் (தலைமையிடம்) தலைமையிலான குழுவினர் ஒவ்வொரு மாதமும் கண்டறிந்து அவர்களது பணியை மதிப்பிட்டு மாதத்தின் நட்சத்திரக் காவலர் என்ற விருது வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப் படும் காவல்துறையினருக்கு ரூ.5 ஆயிரம் வெகுமதி, தனிப்பட்ட செயல்திறன் பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்படும். இந்த விருது மாதந்தோறும் 5ஆம் தேதி வழங்கப்படும். எனவே காவல் துறையில் மெச்சத்தக்க வகையில் பணியாற்றி அதன் விபரத்தை தங்கள் துணை ஆணையர் மூலமாக கூடுதல் காவல்துறை ஆணையருக்கு தெரியப்படுத்தலாம். மாதத்தின் நட்சத்திர காவலர் விருதை பெறும் வகையில் காவல்துறையினர் தங்களது பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment