டோக்கியோ, அக். 28- ஜப்பான் இளவரசி மாகோ 3 ஆண்டுகளுக்குப் பிறகு தன்னுடன் படித்த சாதாரண இளைஞரை காதல் திருமணம் செய்தார்.
ஜப்பான் அரச குடும்பத்தில் ஆண்கள் மட்டுமே வழி வழியாக பட்டத்துக்கு வரும் பாரம்பரியம் கடைப்பிடிக்கப்படுகிறது. பழைமைவாதிகள் இன்னும் பெண் வாரிசுகளுக்கு பட்டம் சூட்டுவதை நிராகரிக்கின்றனர். பேரரசர் நரு ஹிட்டோவுக்கு பிறகு, அகிஷினோ, அவரது மகன் ஹிசாஹிட்டோ மட்டும் அரச குடும்ப வாரிசுகளாக உள்ளனர். அரச குடும்ப பெண்கள் காதல் திருமணம் செய்தால் அவர் கள் அரச குடும்ப தகுதியை இழப் பார்கள். அரச குடும்ப சட்டப்படி, பெண்களுக்கு ஒரு குடும்ப பெயர் தான் இருக்க வேண்டும்.
இந்நிலையில் ஜப்பான் இளவ ரசி மாகோ, தன்னுடன் டோக் கியோ பன்னாட்டு கிறிஸ்தவ பல்கலை.யில் படித்த வகுப்பு தோழன் கேய் காமுரோவை காத லித்து வந்தார். இவர்கள் 2017ஆம் ஆண்டு தங்களின் திருமணத்தை அறிவித்தனர். அப்போது ஏற்பட்ட சில நிதி விவகார பிரச்சினையால் திருமணம் தள்ளிப்போனது. இந் நிலையில், காமுரோ 2018ஆம் ஆண்டு சட்டம் படிக்க அமெரிக்கா சென்று விட்டார். கடந்த மாதம் அமெரிக்காவில் இருந்து ஜப்பான் திரும்பினார். இந்நிலையில், காமுரோ -இளவரசி மாகோ திரு மணம் 26.10.2021 அன்று நடந்தது. இதன்மூலம், அரச குடும்ப தகு தியை மாகோ இழந்தார்.
எந்தவித ஆடம்பர விழாக்க ளும், திருமண சடங்குகள், அழைப் பிதழ்கள், அறிவிப்புகள் இல்லாம லும் எளிமையாக திருமணம் நடந் தது. இது குறித்து இளவரசி மாகோ கூறுகையில், "காமுரோ எனக்கு விலை மதிப்பற்றவர். எங்கள் மனம் விரும்பியபடி மகிழ்ச்சியாக வாழ் வதற்கு இந்த திருமணம் அவசிய மாகிறது" என்றார். காமுரோ கூறு கையில், "மாகோவை நான் நேசிக்கி றேன். நான் ஒருமுறை தான் வாழப் போகிறேன். அதனால், என்னை நேசிப்பவருடன் சேர்ந்து வாழ் வதை விரும்புகிறேன். மாகோவுடன் எனது எண்ணங்களை பகிர்ந்து கொண்டு, ஒருவருக்கொருவர் ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும் மகிழ்ச்சி நேரத்திலும், கஷ்ட நேரத் திலும் உறுதுணையாக இருப் போம், என்றார்.
பணம் வாங்க மறுப்பு
அரச குடும்ப உரிமை துறந்து வெளியேறுவதற்காக மாகோவுக்கு அவருடைய பெற்றோர் ரூ.100 கோடியை வழங்கினர். ஆனால், அதை ஏற்க மாகோ மறுத்து விட்டார். ஒரு சாமானியரை மணந்த அரச குடும்பப் பெண்கள், வரதட்சணை என்று தரப்படும் தொகையை வேண்டாம் என்று அரண்மனையை விட்டு வெளியே றுவது 2ஆம் உலகப் போருக்குப் பிறகு இதுவே முதன்முறை.
அரச குடும்ப தகுதியை இழந்து அரண்மனையை விட்டு இளவரசி மாகோ வெளிர் நீல நிற உடை அணிந்து பூங்கொத்து கையில் பிடித்தபடி வெளியேறினார். தனது தந்தை இளவரசர் அகி ஷினோ, தாய் பட்டத்து இளவரசி கிகோ ஆகியோர் முன் தலை வணங்கி விடைபெற்றார். பின்னர், சகோதரி காகோவை கட்டிப் பிடித்து அழுதார்.
No comments:
Post a Comment