பெங்களுரு, அக். 28- பெரிய வங்கிகளின் வலைதளம் போல போலியாக உருவாக்கி வாடிக்கையாளர்களின் பணத்தை சுருட்டு வது அதிகரித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த நார்டன் லேப்ஸ் நிறுவனம், மின்னணு பிரிவில் நுகர் வோரின் பாதுகாப்பு குறித்து, ஜூலை-செப் டம்பர் வரை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள தாவது:
முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றை போல போலி வலைதளங்களை உருவாக்கி, வாடிக்கை யாளர்களிடம் பண மோசடி செய்வது அதி கரித்துள்ளது.
மக்களிடம் விழிப்புணர்வு இருந்தால் இத் தகைய மோசடிகளை தடுக்கலாம். ‘தொழில் நுட்ப உதவிக்கு’ என கண் சிமிட்டும் ‘பாப்-அப்’ விளம்பரங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.அதை ‘கிளிக்’ செய்து நுழைவோரின் வங்கி விவரங்கள் திருடப்பட வாய்ப்பு உள்ளது.
அதனால், பாப்-அப் விளம்பரங்களை கிளிக் செய்வதை விட, உரிய நிறுவனத்தின் அதிகாரபூர்வ வலைதளத்திற்கு சென்று தேவையான விவரங்களை பெறுவதே சிறந்தது. ஆய்வில், பெரிய வங்கி களைப் போல போலி வங்கிகளின் வலைதளத்தில் வாடிக்கையாளர்களை ஏமாற்றி விவரங் களை திருடுவது அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது.
குறிப்பாக வங்கிகள் வழங்கும் ‘கிப்ட் கார்டு’ எனும் அன்பளிப்பு அட்டைகளில் தான் அதிக மோசடி நடக்கிறது.ஒரே நிறு வனம் பல கிப்ட் கார்டுகளை தயாரிப்பது தான் இதற்கு காரணம். உலகளவில் ஜூலை-செப்டம்பர், வரை 1.23 கோடி போலி வலை தள முகவரிகள் முடக்கப் பட்டுள்ளன. சந் தேகத்திற்கிடமான, 86 கோடி வலைதளங் களின் செயல்பாடுகள் தடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் அச் சுறுத்தலான 1.72 கோடி வலைதளங்கள் முடக்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment