ஏலத்துக்கு வருகிறது உலகின் முதல் அஞ்சல் தலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 28, 2021

ஏலத்துக்கு வருகிறது உலகின் முதல் அஞ்சல் தலை

லண்டன், அக். 28- உலகில் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் 181 ஆண்டு பழைமை யான 'அஞ்சல் தலை' எனப்படும் அஞ்சல் தலை, ஏலத்துக்கு வருகிறது; இது, 61.82 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்படும் என, எதிர்பார்க்கப் படுகிறது.

அய்ரோப்பிய நாடான பிரிட் டனைச் சேர்ந்த 'சோத்பை' என்ற ஏல நிறுவனம், டிச., 7இல் உலகின் மிகப் பழைமையானஸ்டாம்பை ஏலத்துக்கு விட உள்ளது. 'பென்னி பிளாக்' எனப்படும், பிரிட்டன் நாணயமான ஒரு பென்னிக்கு விற் கப்பட்ட மூன்று அஞ்சல் தலை தொகுப் பில், இரண்டு ஏற்கெனவே அருங் காட்சியகத்தில் உள்ளன.

மூன்றாவது ஸ்டாம்பை, ஸ்காட் லாந்தைச் சேர்ந்த அரசியல்வாதி யான, அஞ்சல் தலை சேகரிப்பாளர் ராபர்ட் வாலஸ் வைத்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அந்த ஸ்டாம்பை வாங்கிய அவர் ஆய்வுகளுக்குப் பின், அது, உலகின் முதல் அஞ்சல் தலைகளில் ஒன்று என் பதை உறுதி செய்துள்ளார்.

கடந்த 1840, ஏப்.,10இல் ஒருவர் எழுதிய கடிதத்தில் இந்த அஞ்சல் தலைஇடம்பெற்றுள்ளது. பிரிட்டன் ராணி விக்டோரியாவின் உருவம் உள்ள அந்த அஞ்சல் தலை, தற்போது ஏலத்துக்கு விடப்பட உள்ளது. இது, 61.82 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்படலாம்.

No comments:

Post a Comment