அமேசான் காட்டில் விமான விபத்து: 6 பேர் சாவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 12, 2021

அமேசான் காட்டில் விமான விபத்து: 6 பேர் சாவு

பொலிவியா, அப். 12- தென் அமெரிக்க நாடான பொலிவியாவின் விமானப்படை விமானம் ஒன்று  இரண்டு இரா ணுவ விமானிகள் மற்றும் நான்கு பொதுமக்களுடன்  அமேசான் காடுகள் வழியே சென்றுகொண் டிருந்தபோது எதிர்பாரா தவிதமாக  காட்டிலேயே விழுந்து விபத்துக்குள்ளா னது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 6 பேரும்  உயிரிழந்தனர்.

விபத்து நடந்த பெனி பிராந்தியத்தை சேர்ந்த காவல்துறையினர் அறிக் கையின்படி, அடர்ந்த மரங்களில் விழுந்ததில் விமானம் தீப்பிடித்துள் ளது. அப்போது அருகில் உள்ள அகுவா டல்ஸ் சமூ கத்தைச் சேர்ந்தவர்கள் தீயை அணைக்க உதவி னர். விமானம் விபத்துக் குள்ளான காரணம் குறித்து விசாரணை நடை பெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment