ரஷ்ய விமான விபத்தில் பாராசூட் வீரர்கள் உள்பட 16 பேர் பலி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 12, 2021

ரஷ்ய விமான விபத்தில் பாராசூட் வீரர்கள் உள்பட 16 பேர் பலி

மாஸ்கோ, அக். 12- ரஷ்யா வில் 21 பாராசூட் சாகச வீரர்கள் உள்பட 23 பேரு டன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 16 பேர் உயிரிழந்த னர். 7 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவின் டாடர்ஸ் டான் பிராந்தியத்தில் 21 பாராசூட் சாகச வீரர்கள் உள்பட 23 பேருடன் எல்-410 விமானம் சென்று கொண்டிருந்து. மென்சிலின்சிக் என்ற இடத்தில்  விமானம் விபத்தில் சிக்கியது. விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. இது குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் அங்கு விரைந்தனர். விமானத்தில்  பயணம் செய்த 23 பேரில் 16 பேர் பரிதாபமாக உயிரிழந்த னர். மேலும், 7 பேர் மீட் கப்பட்டு மருத்துவனை யில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் ஒருவரின் நிலை கவலைக் கிடமாக உள்ளது.


No comments:

Post a Comment