புலம் பெயர் தமிழர் நல வாரியம் அமைப்பு - நன்றி அறிக்கை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 12, 2021

புலம் பெயர் தமிழர் நல வாரியம் அமைப்பு - நன்றி அறிக்கை

உலகின் தொன்மை இனமாக விளங்கும் தமிழினத்தினர் உலகளாவிய அளவில் சற்றொப்ப 155 நாடுகளிலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் பல்லாண்டு காலமாக வாழ்ந்து வருகின்றனர். தமிழர்கள் உலகின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் அவர்களுக்குத் தாய் வீடாக விளங்குவது இந்தியாவின் தமிழ் நாடு மாநிலம் ஆகும்.

தமிழின உணர்வுகளை மதிக்கும் ஒரு முதலமைச்சராக மாண்புமிகு மு.. ஸ்டாலின் அவர்கள் பதவியேற்ற நாள் முதல் தமிழ் நாட்டு மக்களுக்கு சமுகம், கல்வி மற்றும் பொருளாதாரம் சார்ந்த பல்வேறு திட்டங்களை அறிவித்து வருவதின் தொடர்ச்சியாக 610 2021 அன்றுபுலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக புலம் பெயர் தமிழர் நலம் வாரியம்'' அமைக்கப் பெற்று அதற்குரிய நிதி ஒதுக்கீடுகளையும் வழங்கியிருப்பது பெரிதும் வரவேற்கக் கூடிய ஒன்றாகும்.

வெளிநாடுகளிலும், வெளிமாநிலங் களிலும் உள்ள தமிழ்ச் சங்கங்கள், தமிழ் அமைப்புகள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் என பலரும் விடுத்தக் கோரிக்கைகள் அனைத்தையும் மனதில் கொண்டு இந்த இனிப்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என எண்ணுகின்றோம்.

எனவே தமிழர் நலங்காக்கும் தமிழ் நாடு அரசு, அதன் முதலமைச்சராகப் பொறுப்பேற்று இதை மக்கள் நலம் போற்றும் ஒரு முழு சனநாயக அரசாக மாற்றியிருக்கும் மாண்புமிகு தமிழ் நாடு முதல்வர் மு.. ஸ்டாலின் அவர்களைப் பெரிதும் போற்றி வணங்குவதுடன் அவர்களுக்கு இந்தியாவின் பிற மாநிலங்கள் வாழ் தமிழர் நலப் பேரமைப்பின் சார்பாக எங்கள் நெஞ்சார்ந்த நன்றியினை அனைத்து மாநில தமிழ் மக்களின் சார்பாகத் தெரி வித்துக் கொள்கிறோம்.

நன்றி,

தங்கள் உண்மையுள்ள, இந்தியாவின் பிறமாநிலங்கள் வாழ் தமிழர் நலப் பேரமைப்பிற்காக,

- சு.குமணராசன்

ஒருங்கிணைப்பாளர்.

No comments:

Post a Comment