புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் சமூக நல அலுவலகங்கள் தமிழ்நாடு அரசு அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 28, 2021

புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் சமூக நல அலுவலகங்கள் தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை, அக்.28 புதிதாக தோற்று விக்கப்பட்டுள்ள தென்காசி, செங்கல்பட்டு உள்பட 6 மாவட்டங் களில் சமூக நல அலுவலகங்கள் அமைத்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

குழந்தைகள், மகளிர், மூத்த குடிமக்கள், திருநங்கைகள் போன்ற சமூகத்தில் நலிவுற்ற பிரிவினரின் நலனுக்கென சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையால் செயல் படுத்தப்படுத்தப்பட்டு வரும் பல் வேறு நலத் திட்டங்களை தமிழ் நாட்டில் புதிதாக தோற்றுவிக்கப் பட்டு உள்ள தென்காசி, கள்ளக் குறிச்சி, மயிலாடுதுறை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் செங்கல் பட்டு மாவட்டங்களில் சீரிய முறை யில் செயல்படுத்த அறிவுறுத்தப் பட்டு இருந்தது. அதன்படி, அந்த மாவட்டங் களில் புதிதாக மாவட்ட சமூக நல அலுவலகங்களை தோற்று வித்து, அந்த மாவட்ட சமூக நல அலுவல கங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலர் உள்ளிட்ட பணியிடங் களைத் தோற்றுவித்தும், அப் பணியிடங்களுக்கும் மாவட்ட சமூக நல அலுவலகங்களில் உள்கட்ட மைப்பு ஏற்படுத்துவதற்கும்ஆகும்

தொடர் மற்றும் தொடரா செலவி னங்களுக் காக ரூ.4 கோடியே 99 லட்சத்து 41 ஆயிரம் அரசால் ஒப்பளிப்பு செய்தும் ஆணைகள் வெளியிடப்பட்டு உள்ளன.

இதன் மூலம் சமூகத்தில் நலிவுற்ற பிரிவினருக்காக செயல்படுத்தப் பட்டு வரும் சமூக நலன் மற்றும் மகளிர்உரிமைத்துறையின் நலத்திட்டங்கள் பயனாளிகளுக்கு எளிதில் சென்றடைவதற்கு வழி வகை செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டு உள்ளது.

No comments:

Post a Comment