சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 77 சதவீதம் நீர் இருப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 29, 2021

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 77 சதவீதம் நீர் இருப்பு

குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை

சென்னை, அக்.29- சென்னை புறநகர் பகுதி களில் பெய்யும் தொடர் மழை காரணமாக குடிநீர் வழங்கும் ஏரிகளில் 77 சத வீதம் நீர் நிரம்பி உள்ளது.

இந்த ஆண்டு 13 டி.எம்.சி. நீர் சேமிக்க அதிகாரிகள் திட்டமிட் டுள்ளனர்.

 சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. அந்த வகையில் குடி நீர் வழங்கும் ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் ஏரிக ளுக்கு நீர் வரத்து அதிகரித்து உள்ளது. குறிப்பாக கிருஷ்ணா நதிநீர் திட்டத்தின் கீழ் பூண்டி ஏரிக்கு ஆந்திர மாநிலம் கண்ட லேறு அணையிலிருந்து திறக் கப்பட்ட நீர் நிறுத்தப்பட்ட நிலையில், மழைநீர் மட்டும் 576 கன அடி வந்து கொண்டு இருக்கிறது.

பூண்டி ஏரியில் 86.01 சதவீத மும், சோழவரத்தில் 74.01 சத வீதமும், புழல் ஏரியில் 81.70 சத வீதமும், கண்ணன் கோட்டை தேர்வாய் கண் டிகை ஏரியில் 91.60 சதவீதமும், 3 ஆயிரத்து 645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம் பாக்கம் ஏரியில் 75.97 சதவீதமும், வீராணம் ஏரியில் 46.92 சதவீதம் நீர் இருப்பு உள்ளது.

 சராசரியாக அனைத்து ஏரிகளிலும் 77.06 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. -

அனைத்து ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13 ஆயிரத்து 222 மில்லியன் கன அடி யில் (13,22 டி.எம்.சி.) ஆகும். அதில் தற்போது ) ஆயிரத்து 189 மில்லியன் கன அடி (10.18 டி.எம்.சி.) நீர் இருப்பு உள்ள து. ஏரிகளில் நீர் நிரம்புவதற்கு புறநகர் பகுதிகளில் பெய்யும் மழையே பிரதான காரணமாக உள்ள து.

தென்மேற்கு பருவமழையை விட, வடகிழக்கு பருவமழை மூலம் தான் தமிழ்நாடு அதிகம் பயன டையும். அந்தவகையில், தற்போது தொடங்கி உள்ள வடகிழக்கு பருவமழை மூலம் தமிழ்நாட்டிற்கு  அதிக நீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

எனவே இந்த ஆண்டு எப்படி யும் சென்னைக்குகுடிநீர் வழங்கும் அனைத்து ஏரிகளிலும் சேர்த்து 13 டி.எம்.சி. நீர் வரை சேமிக்கதிட்ட மிடப்பட்டு உள் ளது.

இதன் மூலம் அடுத்த ஆண்டு முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை .

மேற்கண்ட தகவல்களை பொதுப்பணித்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment