ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் சொத்துக் கணக்கை சமர்ப்பிக்க வேண்டும் - தமிழ்நாடு அரசு உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 29, 2021

ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் சொத்துக் கணக்கை சமர்ப்பிக்க வேண்டும் - தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை, அக்.29 ஆசிரியர்கள் சொத்துக் கணக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் நடத்தை விதிகள் 1973, விதி 7 (3)-இன்படி, அரசு பணியாளர் ஒவ்வொருவரும் தங்களுடைய சொத்து மற்றும் கடன் விவர அறிக்கையினை உரிய காலத்தில் சமர்ப்பித்தலை அனைத்து துறை செயலாளர்களும் உறுதி செய்ய வேண்டும் என்று மனிதவள மேலாண்மைத் துறை செயலாளர் மய்திலி கே.ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவை தொடர்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரகத்தின் இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அரசின் இந்த கடிதத்தை இணைத்து அனுப்பி இருக்கிறார்.

அதன்படி, ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் தங்களுடைய சொத்து மற்றும் கடன் விவரங்களை அறிக்கையாக சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

No comments:

Post a Comment