மீன் வளர்ச்சிக் கழக தலைவராக ந.கவுதமன் நியமனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 29, 2021

மீன் வளர்ச்சிக் கழக தலைவராக ந.கவுதமன் நியமனம்

சென்னை,அக்.29- தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவராக நாகப்பட்டினத்தை சேர்ந்த மீனவர் .கவுதமனை முதலமைச்சர் மு..ஸ்டாலின் நியமித் துள்ளார்.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு மீன் வளர்ச்சிக்கழத்தின் தலைவராக, நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த .கவுதமனை முதலமைச்சர் மு...ஸ்டாலின் நியமித்துள்ளார். இவர் தமிழ்நாடு மீனவர் பிரச்சினைகளை களையும் பொருட்டு, அரசு தரப்பில் அமைத்த குழுவில் இடம் பெற்று, இலங்கை சென்று, அங்கு நடந்த கூட்டத்தில் கலந்துகொண்டு மீனவர் பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு கண்டவர். கடந்த 2006-ஆம் ஆண்டு நாகப்பட் டினம் நகரமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.

No comments:

Post a Comment