பெங்களூருவில் 7 பேருக்கு புதிய வகை கரோனா தொற்று மீண்டும் ஊரடங்கு குறித்து அமைச்சர் ஆலோசனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 28, 2021

பெங்களூருவில் 7 பேருக்கு புதிய வகை கரோனா தொற்று மீண்டும் ஊரடங்கு குறித்து அமைச்சர் ஆலோசனை

பெங்களூரு,அக்.28- பெங்களூ ருவில் புதிய வகை கரோனா .ஒய்.4.2 வைரஸ் தொற்றுக்கு 7 பேர் ஆளாகியுள்ளதால், மீண் டும் ஊரடங்கை அமல்படுத் துவது குறித்து கருநாடகா மாநில சுகாதாரத்துறை அமைச் சர் சுதாகர், கரோனா கட்டுப் பாட்டு குழுவினருடன் ஆலோ சனை நடத்தியுள்ளார்.

கரோனா 3வது அலையில் புதிய வகை கரோனா .ஒய்.4.2 வைரஸ் வெளிநாடுகளில் பரவி வரும் நிலையில், இந்தியாவில் மத்தியபிரதேசம், மகாராட்டிரா ஆகியமாநிலங்களிலும் இவ் வகை வைரஸ் பாதிப்பு கண்டறி யப்பட் டுள்ளது. இந்த வைரஸ் முந்தைய வைரஸை காட்டிலும் 6 மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது என ஆய் வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பெங்களூரு வில் 7 பேருக்கு புதிய வகை .ஒய்.4.2 கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை யடுத்து கருநாடகா மாநில சுகா தாரத் துறை அமைச்சர் டாக்டர் கே.சுதாகர் கரோனா கட்டுப் பாட்டு குழுவினர் மற்றும் சுகா தாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அந்த கூட்டத்தில் புதிய வைரஸை கட்டுப்படுத்துவது, சிகிச்சை வசதிகளை மேம்படுத்து வது, கட்டுப்பாடுகளை விதிப் பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

பெங்களூருவில் திறக்கப்பட் டுள்ள பள்ளி, கல்லூரி, திரைய ரங்கம், உணவகங்கள் ஆகிய வற்றை மூட உத்தரவிட்டு, மீண் டும் ஊரடங்கை அமல்படுத் துவது குறித்தும் ஆலோசிக்கப் பட்டதாக கூறப்படுகிறது.

இந்த கூட்டத்துக்குபின் அமைச்சர் சுதாகர் முதலமைச்சர் பசவராஜ் பொம்மையை சந் தித்து புதிய வகை வைரஸ் தாக்கம் குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் சுதாகர் கூறும்போது, ''புதிய வகை வைரஸ் தொற்றினால் பாதிக்கப் பட்டுள்ள 7 பேரின்மாதிரிகள் மீண்டும் மரபணு பரிசோத னைக்கு அனுப்பி வைக்கப்பட் டுள்ளது. 7 பேரும் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலை யில், அவர்கள் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப் படுத் தப்பட்டுள்ளனர்.

இதன் பரவல் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் முதலமைச்சர் பசவராஜ் பொம் மையை சந்தித்துஆலோசித்தேன். பிரிட்டன், ரஷ்யா வில் புதிய வகை வைரஸ்தாக்கம் அதிகரித் துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப் பட்டுள்ளது'' என்றார். நேற்றைய (27.10.2021) நிலவரப்படி கரு நாடகாவில் புதிதாக 390 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 12 பேர் சிகிச்சை பலனின்றி உயிரி ழந்துள்ளனர். 410 பேர் மருத்துவ மனையில் இருந்து குண மடைந்து வீடு திரும்பியது குறிப் பிடத்தக்கது.

No comments:

Post a Comment