உ.பி.யில் 3 லட்சம் வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 28, 2021

உ.பி.யில் 3 லட்சம் வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன

லக்னோ,அக்.28- கடந்த ஆண்டு கரோனா வைரஸ் பரவத் தொடங்கியவுடன் .பி.யிலும் பல நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப் பட்டிருந்தது. இதை மீறியவர்கள் மீது, பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மொத்த வழக்குகளில் 3 லட்சத் துக்கும் மேற்பட்டவற்றை திரும்பப் பெற .பி. அரசு முடிவு செய்துள் ளது. மேனாள் மற்றும் இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சட்ட மேலவை உறுப்பினர்கள் நாடாளு மன்ற உறுப்பினர்கள் மீதான வழக் குகளை திரும்பப் பெறுவதில்லை என முடிவாகி உள்ளது.

இதுகுறித்து .பி. அரசின் நீதித்துறை முதன்மைச் செயலாளர் பிரமோத் குமார் சிறீவாத்ஸவா கூறும்போது, “பேரிடர் மேலாண்மை சட்டத்தின் 188, 269, 270, 271 ஆகிய பிரிவுகள் மற்றும் தொற்றுநோய் சட்டத்தின் 188, 269, 270, 271 ஆகிய பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற உள் ளோம். இவற்றில் குற்றப்பத்திரிகை பதிவான வழக்குகளில் அவற்றை அரசு வழக்குரைஞர்கள் திரும்பப் பெறுவார்கள்என்றார்.

No comments:

Post a Comment