'பெகாசஸ்' - நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த முயற்சிப்போம் : ராகுல்காந்தி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 28, 2021

'பெகாசஸ்' - நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த முயற்சிப்போம் : ராகுல்காந்தி

புதுடில்லி,அக்.28- நாட்டின் எதிர்க்கட்சி தலைவர்கள், பத்திரி கையாளர்கள், சமூகசெயற்பாட் டாளர்கள், நடிகர்கள், தொழி லதிபர்கள் உள்பட பல்வேறு முக்கிய நபர்களின் தொலைப்பேசி உரையாடல்களை இஸ்ரேலின் 'பெகாசஸ்என்ற மென் பொருளை பயன்படுத்தி ஒன்றிய அரசு ஒட்டுக்கேட்டதாக குற்றச் சாட்டுகள் எழுந்தன.

இந்த விவகாரம் குறித்த உண்மையை கண்டறிய சிறப்பு விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றத்தில், இந்த விவ காரம் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட சிறப்பு நிபுணர் குழுவை அமைத்து உத்தரவிட்டது.    

இந்நிலையில், தொலைப்பேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர் பாக விசாரிக்க 3 பேர் கொண்ட நிபுணர் குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியா ளர்கள் சந்திப்பில் ராகுல்காந்தி கூறியதாவது:-

கடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரின் போது பெகாசஸ் விவகாரத்தை நாங்கள் எழுப்பினோம். உச்சநீதிமன்றம்  தனது கருத்தை தெரிவித்துள் ளது. நாங்கள் என்ன கூறியிருந்தோமோ அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. நாங்கள் 3 கேள்விகளை எழுப்பியுள்ளோம். 'பெகாசஸ்மென் பொருளை அங்கீகரித்தது யார்? இது யாருக்கு எதிராக பயன்படுப்பட் டுள்ளது? நமது மக்களின் தகவல் களை பிற நாடுகள் பெற்றுள் ளனவா?

பெகாசஸ்இந்திய ஜன நாயகத்தை நசுக்கும் முயற்சி. இந்த விவகாரத்தை விசாரிக்க உள்ளோம் என்று உச்சநீதிமன் றம்கூறியிருப்பது மிகப்பெரிய நடவடிக்கையாகும். இந்த விவ காரத்தில் உண்மையை தெரிந்து கொள்வோம் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது.

பெகாசஸ்ஒட்டுக்கேட்பு விவகாரத்தை விசாரிக்க உச்சநீதி மன்றம் ஏற்றுக்கொண்டதில் எங்களுக்கு மகிழ்ச்சி. இந்த விவகாரத்தை நாங்கள் மீண்டும் நாடாளுமன்றத்தில் எழுப்பு வோம். நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த முயற்சிப்போம். ‘பெகாசஸ்விவகாரம் குறித்து விவாதம் நடத்த பாஜக விரும் பாது என்பது எனக்கு நிச்சயம் தெரியும்.

பெகாசஸ்முதலமைச்சர்கள், முன்னாள் பிரதமர்கள், பாஜக அமைச்சர்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. ‘பெகாசஸ்மென்பொருளை பயன்படுத்தி பெறப்பட்ட தக வல்களை பிரதமர் மற்றும் உள் துறை அமைச்சர் பெற்றனரா?. தேர்தல் ஆணையம், எதிர்க்கட்சி தலைவர்களின் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டு அந்த தக வல்கள் பிரதமருக்கு செல்லுமா னால் அது குற்ற செயலாகும்என்றார்.

No comments:

Post a Comment