கரோனாவால் இறந்தவர்களில் 90 விழுக்காட்டினர் தடுப்பூசி போடாதவர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 5, 2021

கரோனாவால் இறந்தவர்களில் 90 விழுக்காட்டினர் தடுப்பூசி போடாதவர்கள்

சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை,அக்.5- தமிழ்நாட் டில் கடந்த 2 மாதத்தில் எடுக் கப்பட்ட கணக்கெடுப்பில் கரோனாவால் இறந்த 90 விழுக் காட்டினரும் தடுப்பூசி செலுத் திக் கொள்ளாதவர்கள் என்று சுகா தாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத் துவமனையில் நடைபெற்ற முகாமை சுகாதாரத்துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ் ணன் 3.10.2021 அன்று ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர் களிடம்  அவர் கூறியதா வது:

தமிழ்நாட்டில் நடைபெற்ற 3ஆம் கட்ட மெகா கரோனா தடுப்பூசி முகாம் நல்ல வெற் றியை தந்துள்ளது. 4ஆவது கட்ட முகாம் 24 ஆயிரம் இடங் களில் நடைபெற்றது. சென் னையில் மட்டும் 1,600 இடங் களில் நடந்தது. தமிழ்நாட்டில் இதுவரை 4.79 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அரசு சார்பில்மட்டும் 4.54 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேற்கு மாவட்டங்களில் தொற் றுக் குறைவதற்கான அறிகுறி தென்படத் தொடங்கியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் கடந்த 2 மாதத்தில் எடுக் கப்பட்ட கணக்கெடுப்பின்படி கரோனா இறப்பில் 90 விழுக் காடினர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களாக உள்ள னர். 2 தவணை தடுப்பூசி போட் டவர்களில் 3.5 விழுக்காடும் ஒருதவணை தடுப்பூசி மட்டும் செலுத்தியவர்களில் 7.4 விழுக் காட்டினரினதும் இறப்பு பதிவாகியுள்ளது. 42 விழுக்காடு முதியோர்களே முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

ஒருகாலத்தில் 3.11 லட்சமாக இருந்த சிகிச்சையில் இருப் போர் எண்ணிக்கை தற் போது 17 ஆயிரமாக குறைந் துள்ளது.

வீடு தேடிச்சென்று தடுப்பூசி

தமிழ்நாட்டில் உள்ள மரபணு பகுப்பாய்வு கூடத்தில் இதுவரை மேற்கொண்ட ஆய் வில் டெல்டா வகை கரோனா வைரஸ் மட்டுமே கண்டறியப் பட்டுள்ளது. வேறு புதிய வகை கரோனா வைரஸ் எதுவும் கண்டறியப்படவில்லை. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர் பாக சுகாதாரம் மற்றும் உள் ளாட்சி அமைப்புகளுக்கு அறி வுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. வீடுதேடி சென்று தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

தற்போது கரோனாவுடன், டெங்கு பாதிப்பும் கவனிக்கப் பட வேண்டிய முக்கிய விசய மாகியுள்ளது. மாவட்ட ஆட் சியர்கள் மூலம் கண்காணிக்கப் படுகிறது. பல இடங்களில் தண்ணீரை மூடி வைக்காத நிலை தற்போதும் இருக்கிறது. இதன்மூலம் ஏடிஸ் கொசு பரவக்கூடும். தினமும் 20 டெங்கு பாதிப்பு பதிவாகிறது. இந்த ஆண்டில் இதுவரை தமிழ்நாட்டில் 2,919 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள் ளனர்.

கடந்த ஆண்டு இதே காலக் கட்டத்தில் 2,410 பேர் டெங்கு வால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த ஆண்டில் டெங்கு பாதிப்பு இறப்பு 2 ஆக உள்ளது. பூச்சியியல் வல்லுநர்கள் கொசுக்கள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். உத்தரப் பிரதேசத்தில் டெங்கு பெரும் பாதிப்பாக இருக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment