சென்னை,அக்.5- ‘உங்கள் துறை யில் முதல்-அமைச்சர்’ திட்டத் தின் கீழ் காவல்துறையினருக்கு குறைதீர்ப்பு முகாம் நடத்தி, அதன்மூலம் எடுக்கப்பட்ட நட வடிக்கைகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்கவேண் டும் என்று அனைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கள், மாநகர ஆணையர்களுக்கு காவல்துறை இயக்குநர் சைலேந் திரபாபு உத்தரவு பிறப்பித்திருந் தார். அதன்படி, தமிழ்நாடு முழுவதும் காவல்துறையினர் குறைதீர்ப்பு முகாம்கள் நடத்தப் பட்டு அவர்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு வரு கின்றன. அந்த வகையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் அரங் கில் காவல்துறையினருக்கான குறைதீர்ப்பு முகாம் 2.10.2021 அன்று நடைபெற்றது. அதில் 1,359 காவல்துறையினர் தங்களு டைய கோரிக்கை மனுக்களை அளித்தனர். காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் அவர் களுடைய குறைகளை கேட்ட றிந்து மனுக்களை பெற்றார்.
குறைதீர்ப்பு முகாம் 2-ஆவது நாளில் 195 காவல்துறையினர் மனுக்களை அளித்தனர்.
2 நாட்களில் மொத்தம் 1,554 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த மனுக்களில், பணி இட மாறுதல், தண்டனைக்குறைப்பு, ஊதிய முரண்பாடு களைதல், காவல்துறை குடியிருப்பு வேண் டுதல், காவல்துறையினர் சேம நல நிதியில் இருந்து மருத்துவ உதவித்தொகை கோருதல் போன்ற கோரிக்கைகள் விடுக் கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment