சுகாதாரத்துறை தகவல்
சென்னை, அக்.5 காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. அதுமட்டுமன்றி, 2025க்குள் அந்நோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்படுகின்றன. அதன் பயனாக காசநோய் பாதிப்பு தொடர்பு விழிப்புணர்வு மேம்பட்டு வருகிறது. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை காசநோயைக் குணப்படுத்தும் விகிதம் கணிசமாக உயர்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த நோயின் தாக்கத்தால் பாதிக்கப்படும் நோயாளிகளில் 84 சதவீதம் பேரை முதல் சிகிச்சையிலேயே குணப்படுத்துவதாகவும், தொடர் சிகிச்சைகள் மூலம் மீதமுள்ளவர்களையும் பூரண குணமாக்குவதாகவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமன்றி, சிகிச்சை காலத்தில் நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து அளிப்பதற்காக நிதியுதவிகளும் வழங்கப் பட்டு வருவதாக கூறியுள்ளனர். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களில் தனியார் மற்றும் அரசு மருத்துவ மனைகளில் காசநோய் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டிருந் தோரின் தரவுகளை ஆய்வு செய்த போது நாடு முழுவதும் 15 லட்சம் பேருக்கு அந்நோய் தாக்கம் இருந்தது தெரிய வந்துள்ளது. குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 3.40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காசநோயால் பாதிக்கப்பட் டுள்ளனர். தமிழ்நாட்டில் 59,164 பேர் காசநோயினால் பாதிக் கப்பட்டுள்ளனர். அவர்களில் தனியார் மருத்துவமனைகளில் 12,851 பேரும், அரசு மருத்துவமனைகளில் 46,313 பேரும் முதல்கட்ட சிகிச்சை பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கடந்த 2020ம் ஆண்டு இதே காலகட்டத்தில் அந்த எண்ணிக்கை 51,751 ஆக இருந்தது என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைத்தறி ஆடைகள் விற்பனையை அதிகரிக்க தள்ளுபடிகளை அறிவிக்க வேண்டும்
அரசுக்கு கைத்தறி நெசவாளர்கள் வலியுறுத்தல்
மாமல்லபுரம்,அக்.5- பட்டு கூட்டுறவு சங்கங்களில் கைத்தறி ஆடைகள் மற்றும் பட்டுச்சேலை விற்பனையை ஊக்கப்படுத்துவதற்கான தள்ளுபடி அறிவிப்புகளை, தமிழ்நாடு அரசு விரைவாக அறிவிக்க வேண்டும் என கைத்தறி நெசவாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக் குன்றம் பகுதிகளில் கைத்தறி நெசவுத் தொழில் அதிகளவில் நடைபெற்று வருகிறது. கூட்டுறவு சங்கங்களில் பல ஆண்டுகள் உறுப்பினர்களாக உள்ள நெசவாளர்கள், உயர்வான கூலியை கருத்தில் கொண்டு பட்டு வேட்டிகள் மற்றும் முகூர்த்த பட்டுச்சேலை தயாரிப்பில் அதிகளவில் ஈடுபடுகின்றனர். விலை அதிகமான பட்டுச்சேலைகளை பொதுமக்கள் அதிகம் விரும்புவதில்லை. ஏனென்றால், முகூர்த்த பட்டுச்சேலையாக ஒன்று மட்டுமே வாங்கு கின்றனர்.
ஆனால், விழாக்களின்போது உறவினர்களுக்கு வழங் குவதற்காக ரூ.4 ஆயிரம் முதல் 10 ஆயிரம் மதிப்பிலான பட்டு வேட்டி மற்றும் சேலைகளையே அதிகம் விரும் புகின்றனர். இதை தனியார் நிறுவனங்கள் சரியாகப் புரிந்து கொண்டு, விலை குறைவான பட்டுச்சேலைகள் மற்றும் வேட்டிகளை உற்பத்தி செய்து விற்பனை செய்கின்றன.
ஆனால், ஒருசில கூட்டுறவு சங்கங்களில் மட்டுமே இந்த முறையில் திட்டமிட்டு பட்டுச்சேலை உற்பத்தி செய்யப்படுகிறது. இதேபோல், கைத்தறியில் தயாரிக்கப்படும் ஆடைகள் மற்றும் கைலிகள் விற்பனையை ஊக்கப்படுத்தும் வகையில் கூட்டுறவு சங்கங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
கைத்தறி ஆடைகள் மற்றும் பட்டுச்சேலைகளுக்கான தள்ளுபடி அறிவிப்புகளை விரைவாக வெளியிட்டு, தனியாருக்கு இணையாக விற்பனையை அதிகரிக்க கைத்தறி மற்றும் துணிநூல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கைத்தறி நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு கைத்தறி நெசவாளர்கள் சம்மேளன மாநில பொதுச்செயலாளர் முத்துக்குமார் கூறியதாவது:
கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் பொங்கல் உள்ளிட்ட விழாக் காலங்களில் தாமதமாகவே தள்ளுபடி அறிவிப்புகளை வெளியிடும் நிலை உள்ளது. இதனால், கூட்டுறவு சங்கங்களில் அதிகளவில் விற்பனை பாதிக்கப்படுகிறது.
மேலும், 20 சதவீதம் தள்ளுபடி என அறிவிப்பு வந்தாலும் ரூ.200 மட்டுமே தள்ளுபடியாக வழங்கப்படுகிறது. அதனால், முழு விலையில் 20 சதவீதம் தள்ளுபடி என்பதை செயல்படுத்த வேண்டும். இதன்மூலம், கூட்டுறவு சங்கங்களில் கைத்தறி ரகங்களின் விற்பனை அதிகரிக்கும். நெசவாளர்கள் பயன்பெறுவர் என்றார்.
இதுகுறித்து, கைத்தறி மற்றும் துணிநூல் துறை நிர்வாகிகள் கூறியதாவது: தமிழ்நாடு அரசு கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் புதிய திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளை விரைவில் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விழாக் கால தள்ளுபடி தொடர்பான அறிவிப்புகள் விரைவில் வெளி யாகும் என நம்புகிறோம் என்றனர்.
தமிழ்நாட்டில் புதிதாக 1,467 பேருக்கு கரோனா தொற்று : 16 பேர் உயிரிழப்பு
சென்னை,அக்.5- தமிழ்நாட்டில் நேற்று (4.10.2021) ஆண்கள் 883,பெண்கள் 584 என மொத்தம்1,467 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். கத்தாரில் இருந்து வந்த ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 181, கோவையில் 155, செங்கல்பட்டில் 103 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,559 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 16,864 பேர் சிகிச்சையில் உள்ளனர். அரசு, தனியார் மருத்துவமனைகளில் இளைஞர்கள், முதியவர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர்.
No comments:
Post a Comment