மதுரை,அக்.5- மதுரை ஆரப் பாளையத்தை சேர்ந்தவர் காசி. இவருடைய மனைவி கார்த்திகா (வயது 23). கடந்த 30-ஆம் தேதி இவர் வீட்டில் இருந்தபோது தலைவலி ஏற்பட்டுள்ளது. உடனே அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். பின்னர் மேல்சிகிச் சைக்காக மதுரை மீனாட்சி மிசன் மருத்துவமனையில் அனும திக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்தபோது அவர் மூளைச் சாவு அடைந்தது தெரியவந்தது.
கார்த்திகாவின் நிலையை அவரது கணவரிடம் மருத்துவக் குழுவினர் எடுத்துக்கூறி, உயி ருக்கு போராடும் மற்ற நோயாளி களுக்கு மற்ற உறுப்புகளை பொருத்தி மறு வாழ்வு கொடுக்க லாம் என்றனர். அவரது கண வரும், இதற்கு ஒப்புக்கொண்டார். அரசிடமும் அனுமதி கோரப் பட்டு துரிதமான நேரத்தில் தமிழ்நாடு அரசும் அனுமதி அளித்தது.
அதன்பின்னர், மருத்துவக் குழுவினர் தலைமையில் சுமார் 5 மணி நேர அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதன் மூலம், ஒரு சிறுநீரகம் மற்றும் கல்லீரல் மீனாட்சி மிசன் மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் வெவ்வேறு நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டன. மற்றொரு சிறுநீரகம் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், இதயம், நுரையீரல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட் டது.
சரியான நேரத்தில் இதயம் மற்றும் நுரையீரல் விமானம் மூலம் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் செல்லும் வகையில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் போக்குவரத்து வசதி செய்து கொடுக்கப்பட்டது. இதுபோல், கண்கள் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு கொடையாக கொடுக்கப்பட்டது. அதன்மூலம் மூளைச்சாவு அடைந்த கார்த்திகாவின் உடல் உறுப்புகள், 7 பேருக்கு அளிக்கப் பட்டு அவர்களுக்கு மறுவாழ்வு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment