வேலை வாய்ப்புக்காக 10ஆம் வகுப்பு கல்வி தகுதியை பள்ளியிலேயே பதிவு செய்ய ஏற்பாடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 5, 2021

வேலை வாய்ப்புக்காக 10ஆம் வகுப்பு கல்வி தகுதியை பள்ளியிலேயே பதிவு செய்ய ஏற்பாடு

சென்னை,அக்.5 வேலைவாய்ப்பு பதிவுக்கு 10-ஆம் வகுப்பு கல்வித் தகுதியை அந்தந்த பள்ளியிலேயே இணையதளம் மூலம் பதிவுசெய்ய  சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. இதுதொடர்பாக மாநில வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை இயக்குநர் வீரராகவ ராவ்  3.10.2021 அன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சிபெற்ற மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியை தாங்கள் படித்தபள்ளியிலேயே வேலை வாய்ப்பு பயிற்சித் துறையின் இணையதளத்தில் பதிவுசெய்து அடையாள அட்டை பெற அரசு வழிவகை செய்துள்ளது. இதன் மூலம், வேலைவாய்ப்பு அலுவ லகத்துக்கு நேரில்வரவேண்டிய அவசியம் இல்லாததால் போக் குவரத்து செலவு, கால விரயம், தேவையற்ற அலைச்சல், கூட்ட நெரிசல் தவிர்க்கப்படும்.

கடந்த 2020-_2021 கல்வி ஆண்டில் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் அந்தந்த பள்ளிகளில் 4-ஆம் தேதி  வழங்கப்படுகிறது. இதையடுத்து, 4-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை ஒரே பதிவுமூப்பு தேதி வழங்கி அவரவர் பள்ளியிலேயே இணையதளம் வாயிலாக வேலை வாய்ப்பு அலுவலக பதிவு நடை பெற பள்ளிக்கல்வித் துறையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள் ளிகள், மெட்ரிக் பள்ளிகள், தனி யார் பள்ளிகள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, ஜாதி சான் றிதழ் ஆகிய விவரங்களுடன் சம் பந்தப்பட்ட பள்ளியை அணுகி பதிவுசெய்துகொள்ளலாம். பதிவு மேற்கொள்ளும்போது மாண வர்கள் அனைவரும் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது, கிருமிநாசினி கொண்டு கைகளை கழுவுவது உள்ளிட்ட கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

சிபிஎஸ்இ மாணவர்கள் தங்கள்கல்வித் தகுதியை வேலை வாய்ப்பு பயிற்சித் துறையின் இணையதளத்தில்  (<https://tnvelaivaaippu.gov.in>) தாங்களாகவே  இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

No comments:

Post a Comment