சென்னை ஏழுகிணறில் உள்ள இராமலிங்க அடிகளார் வாழ்ந்த இல்லம் புதுப்பிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 5, 2021

சென்னை ஏழுகிணறில் உள்ள இராமலிங்க அடிகளார் வாழ்ந்த இல்லம் புதுப்பிப்பு

அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆய்வு

சென்னை,அக்.5- வடலூர் இரா மலிங்க அடிகளாரின் பிறந்த நாளையொட்டி சென்னை ஏழு கிணறு பகுதியில், அவர் வாழ்ந்த இல்லத்தை இந்து சமய அற நிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

இராமலிங்க அடிகளாரின் பிறந்தநாளில் அவர் வாழ்ந்த வீட்டை பார்வையிட முதல மைச்சர் அறிவுறுத்தினார். இது வரை எந்த இந்து சமய அற நிலையத்துறை அமைச்சரும் அவ ரின் வீட்டை ஆய்வு செய்ததில்லை. முதல் முறையாக அறநிலையத் துறை அமைச்சராக நான் பார் வையிட்டுள்ளேன். இராமலிங்க அடிகளார் வாழ்ந்த இல்லத்தை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.. வடலூரில் 72 ஏக்கர் நிலப் பரப்பில் வள்ளலாரின் மணிமண் டபம் அமைக்க, வரைபடம் தயார் செய்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 

கோயில் நகைகளை உபயோகப் படுத்தும் திட்டத்திற்கு 3 மண்டல மாக சென்னை, மதுரை, திருச்சி என பிரித்து அதிகாரிகள் நியமிக் கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்த நகைகளை இல்லாமல், தற்பொழுது பயன் பாட்டில் இருக்கக்கூடிய நகைகள் உருக்குவதற்கான வேலைகள் தொடரும். திருவேற்காட்டில் செய்முறை விளக்கம் அளிக்கப் பட்டுள்ளது. அதில் இருந்து ஒரு குண்டு மணி அளவில் கூட முறை கேடு நடக்காது. வெளிப்படை தன்மையோடு தொடங்குவோம். எந்த தவறும் நடக்காது. ஏற்கெ னவே திருச்சி, சமயபுரம் கோவி லில் இந்த திட்டம் நடைமுறையில் இருக்கிறது.

நகைகளை உருக்கும் திட்டத் திற்கு பா... கண்மூடித்தனமாக எதிர்க்கிறது, நகைகள் பயன் படாமல் வைத்திருப்பதால் யாருக்கு என்ன லாபம், அவர்கள் ஏதேனும் திட்டம் வைத்திருந்தால் செயல்படுத்தட்டும், மதம், இனம் வைத்து அரசியல் செய்யக்கூடாது என்று முதல்-அமைச்சர் கூறியுள் ளார். அதை நானும் செய்யமாட் டேன். எம்மதமும் சம்மதம்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment