லக்னோ, அக். 5- பாஜக ஆளும் உ.பி.யில் போராடும் விவசாயிகளுக்கு பின்னால் சென்ற பாஜகவினர் காரை ஏற்றி படு கொலை செய்தனர். அதன் காட்சிப்பதிவு சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
உத்தரர் பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரி மாவட்டம், பன்வீர்பூரில் ஒன்றிய பாஜக அரசின் புதிய 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். இந் நிலையில், அப்பகுதியில் உத்தரப்பிரதேச மாநில துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா பங்கேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க ஏராளமான பாஜகவினர் வாக னங்களில் சென்றனர். அப்பகுதியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்திய இடத்தை அவர் கள் கடந்து சென்றனர். அப்போது பாஜகவினரின் காரை போராடும் விவசாயிகள்மீது ஏற்றியதால், விவசாயிகள் படுகாயமடைந்து உயிரிழந்தனர்.
அதனைத் தொடர்ந்து பாஜகவினரின் வாகனங்கள் தாக்கப்பட்டன. 2 கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. விவசாயிகள், பாஜகவினர் என இருதரப்பினருக்கும் இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டு கலவரமாக மாறியது.
இதுகுறித்து விவசாயிகள் கூறும் போது, "ஒன்றிய உள்துறை இணைய மைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா வேண்டுமென்றே விவசாயிகள் மீது காரை ஏற்றினார். இதில் 4 விவசாயிகள் உயிரிழந்தனர்" என்று தெரிவித்தனர்.
30 பேர் மீது வழக்கு
கலவரம் தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒன்றிய உள் துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உட்பட 30 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கலவரம் குறித்து காவல்துறை வட்டா ரங்கள் கூறும்போது, "லக்கிம்பூரில் வாக னம் மோதியதில் விவசாயிகள் நட்சத்திரா சிங் (55), தல்ஜித் சிங் (35), லாவேபிரித் சிங் (20), குருவேந்திர சிங் (18) உயிரிழந்தனர். பாஜக தரப்பில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். ரத்தன் காஷ்யப் என்ற செய்தியாளரும் கலவரத்தில் உயிரிழந்துள்ளார். முதல் கட்ட விசாரணையில் வாகனம் மோதி அவர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது" என்று தெரிவித்தன.
காவல்துறை உயரதிகாரி பிரசாந்த் கிஷோர் செய்தியாளர்களிடம் கூறும் போது, லக்கிம்பூர் கலவரம் குறித்து உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலை மையில் விசாரணை நடத்தப்படும். 8 நாட்களில் உண்மையான குற்றவாளிகள் நீதியின் முன்பு நிறுத்தப்படுவார்கள்" என்று தெரிவித்தார்.
பிரியங்கா சாடல்
கலவரத்தில் உயிரிழந்த விவசாயி களின் குடும்பங்களை சந்திக்க காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி லக்கிம்பூருக்கு சென்றார். சீதாபூரில் அவர் கைது செய் யப்பட்டு அங்குள்ள விருந்தினர் மாளி கையில் காவலில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில், இது குறித்து பிரியங்கா காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில், "நரேந் திர மோடி சார், உங்கள் அரசு என்னை எஃப்அய்ஆர் கூட பதிவு செய்யாமல் 28 மணி நேரமாக என்னை சிறை வைத்து உள்ளது. ஆனால், விவசாயிகளை வாக னம் ஏற்றிக் கொலை செய்தவர்கள் இது வரை கைது செய்யப்பட்டவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.
அமைச்சரை நீக்காவிட்டால் ஆட்சி யில் இருக்காதீர்கள்:
மேலும் தனியார் தொலைக்காட்சிக்கு பிரியங்கா அளித்த பேட்டியில், "மோடி ஜி நீங்கள் ஏன் லக்னோவுக்கு வருகிறீர்கள். சுதந்திரத்தை கொண்டாடவா? சுதந்தி ரத்தை நமக்குக் கொடுத்தது விவசாயிகள் அல்லவா? அவர்களை துயரத்தில் ஆழ்த்தி விட்டு கொண்டாட்டங்கள் தேவையா? அஜய் மிஸ்ராவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குங்கள். அவர் இன்னமும் அமைச்சராகத் தொடர்வதற்கு என்ன தகுதி இருக்கிறது. என்னைப் போன் றோரை கைது செய்துவிட்டு, மிகவும் கொடூரமான குற்றத்தை செய்த அமைச் சரை நீக்கவில்லையே" என்று கேள்வி எழுப்பியுள்ளார். அமைச்சரை நீக்கா விட்டால் ஆட்சியில் இருக்க நீங்கள் தகுதி யவற்றவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
தலைவர்கள் தடுத்து நிறுத்தம்
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், லக்கிம்பூருக்கு செல்வேன் என்று அறிவித்தார். இதைத் தொடர்ந்து லக்னோவில் உள்ள அவரது வீட்டின் முன் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டது. அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இதை கண்டித்து அவர் மறியலில் ஈடு பட்டார். பஞ்சாப் துணை முதலமைச்சர் சுகீந்தர் லக்கிம்பூருக்கு செல்ல முயன்றார். அவரது காரும் சஹரான்பூரில் தடுத்து நிறுத்தப் பட்டது.
காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் தலைவர்கள் பலர் வீட்டுக் காவலில் வைக் கப்பட்டனர். லக்கிம்பூர் கெரி மாவட்டத் தில் இணையசேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது. அந்த பகுதி முழுவதும் 144 தடை யுத்தரவு அமல் செய்யப்பட்டிருக்கிறது.
No comments:
Post a Comment