மொழியால் தமிழன்; வழியால் - விழியால் திராவிடன்! ‘நீட்': சட்டப் போராட்டம் - மக்கள் போராட்டம் வெற்றியைக் கொண்டு சேர்க்கும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 5, 2021

மொழியால் தமிழன்; வழியால் - விழியால் திராவிடன்! ‘நீட்': சட்டப் போராட்டம் - மக்கள் போராட்டம் வெற்றியைக் கொண்டு சேர்க்கும்!

நியூஸ் 18 தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி

சென்னை, அக்.5  மொழியால் தமிழன்; வழியால் -விழியால் திராவிடன்.  நீட்' சட்டப் போராட்டம் - மக்கள் போராட்டம் போன்றவற்றால் வெற்றியைக் கொண்டுவந்து சேர்க்கும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு சிறப்பு நேர்காணலில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேட்டி அளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

சமூகநீதிக்காகத்தான் தந்தை பெரியாரே பொதுவாழ்க்கைக்கு வந்தார்!

நெறியாளர்: பெரியார் பிறந்த நாள் சமூகநீதி நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார், அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: தந்தை பெரியார் மறைந்தார் என்று சொல்வதற்கில்லை; அவர் நிறைந்தார் நெஞ்சங்களில் என்று சொல்வதற்கான அடையாளம்.

சமூகநீதிக்காகத்தான் தந்தை பெரியார் அவர்கள் பொதுவாழ்க்கைக்கே வந்தார். சமூகநீதிக்காகத்தான் தந்தை பெரியார் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அதே சமூகநீதிக்காகத்தான் காங்கிரசைவிட்டு வெளியே வந்தார்.

சமூகநீதிக்காகத்தான் சுயமரியாதை இயக்கத்தை ஆரம் பித்தார்; திராவிடர் கழகத்தை ஆரம்பித்தார்.

எனவே, அவருடைய மிக முக்கியமான இலக்கு என்பது சமூகநீதி. அதிலே மிகப்பெரிய அளவிற்கு வெற்றியை பெற்றார்.  சமூகநீதியின் ஆட்சியின் தொடர் ஆட்சியாக வந்திருக்கின்ற நிலையில், இன்றைய முதல மைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள், தந்தை பெரியார் பிறந்த நாளை, சிறப்பாக சமூகநீதி நாளாகவே அதை அறிவித்து ஒரு பிரகடனத்தை, உறுதிமொழியை எடுக்க வேண்டும் அந்நாளில் என்று அவர் அறிவித்திருப்பது எல்லோரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது; நாங்கள் எல்லையற்ற மகிழ்ச்சியைப் பெற்றிருக்கிறோம்.

..சி., பாரதியாரை இருட்டடிப்பு செய்யக்கூடாது!

நெறியாளர்: தமிழக பா... என்ன சொல்கிறார்கள் என்றால், பெரியாரின் பிறந்த நாளை சமூகநீதி நாளாகக் கொண்டாடுவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால், அவருக்கு முன்பாகவே, சமூகநீதிக்குக் குரல் கொடுத்த திரு...சி., திரு.பாரதியார் போன்றவர்களை இருட்டடிப்பு செய்யக்கூடாது என்கிறார்களே?

தமிழர் தலைவர்: சமூகநீதி என்பது அடிப்படையில் கல்வி, உத்தியோகத்தில் இட ஒதுக்கீடு. எனவே, சமூகநீதிக்கு வேறு விளக்கங்கள் சொல்லக்கூடாது.

இட ஒதுக்கீடு என்பதில் திராவிடர் இயக்கம்தான் செய் ததைத் தவிர, நீங்கள் சொல்கின்றவர்கள் இட ஒதுக்கீட்டிற்கு எதிரிகளாகத்தான் இருந்திருக்கிறார்கள்.

பெண்ணுரிமை மற்றவற்றைப்பற்றி பாரதியார் பேசியி ருக்கலாம்; நீதிக்கட்சிக்கு, பாரதியார் எதிராகத்தான் பேசி யிருக்கிறார். நீதிக்கட்சி எல்லோரையும் பிரிக்கிறது என்ப தற்கு, பாரதியார் எழுதிய எழுத்துகள் இன்னும் சாட்சியமாக இருக்கின்றன. சுதேசமித்திரன் போன்ற பத்திரிகையில் எழுதியிருக்கிறார்.

அவருடைய முற்போக்குக் கருத்துகளைப்பற்றி நாங்கள் எதுவும் சொல்லவில்லை. சமூகநீதி என்பதில், குறிப்பாக எதைப்பற்றி நாங்கள் அடிப்படையாக சொல்கிறோம் என்றால்,  எதைக் கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்கக் கூடாது- எதைக் கொடுத்தாலும் உத்தியோகத்தைக் கொடுக் கக்கூடாது என்பதுதான் அவர்களுடைய அடிப்படை.

ஆகவே, ஒவ்வொரு காலகட்டத்தில், ஒவ்வொரு விதமான சூழ்நிலை இருக்கிறது.

10 மாத வி.பி.சிங் ஆட்சியில், மண்டல் பரிந்துரையை அமல்படுத்தினார் என்பதற்காக, அவருடைய ஆட்சியை கவிழ்த்தவர்கள் பா...வினர்.

மற்றவர்கள் இன்றைக்கு உரிமை கொண்டாடுகிறார்கள் என்றால், இந்தக் கருத்துக்கு செல்வாக்கு வந்துவிட்டது என்பதற்காக உரிமை கொண்டாடுகிறார்களே தவிர, வேறொன்றும் கிடையாது.

பெரியார் மட்டுமே முன்னிறுத்தப்படுகிறார்

நெறியாளர்: பெரியார் அவர்களை மட்டும் குறிப்பிட்டு சொல்கிறார்கள்; மண்டல் கமிசனைப்பற்றி சொன்னீர்கள். மொரார்ஜி தேசாயிலிருந்து வி.பி.சிங் வரைக்கும் எல் லோருக்கும் அதில் பங்கிருக்கிறது. ஆனால், இந்த இடத்தில் பெரியார் மட்டுமே முன்னிறுத்தப்படுகிறார் - அடை யாளப்படுத்தப்படுகிறார் என்று சொல்கிறார்களே?

தமிழர் தலைவர்: ஏனென்று கேட்டால், வி.பி.சிங் அவர் கள் மண்டல் கமிசனை  நாடாளுமன்றத்தில் அறிமுகப் படுத்தியபொழுது, தந்தை பெரியார் பெயரை முதலில் சொல்லிவிட்டுத்தான், மற்றவர்களின் பெயர்களைச் சொன் னார்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், பெரியாருடைய பிறந்த நாள் என்பது -சமூகநீதி நாள் என்று சொன்னால், மற்றவர்களுக்கு சமூகநீதியில் பங்கில்லை என்று அர்த்தம் இல்லை.

யார் அதிகமாக அந்த உணர்வுகளைப் பயன்படுத் தினார்கள் - இன்றைக்கு சமூகநீதி என்றால் பெரியார்; பெரியார் என்றால், சமூகநீதி. ஏனென்றால், முதலாவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் உருவாவதற்குக் காரணமானவர்.அம்பேத்கர் அவர்களும் சமூகநீதிக்காகப் பாடுபட்டவர்தான்; போராடியவர்தான்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், இந்த வரலாற்றை உருவாக்கி, இந்தியாவிற்கே கொடுத்தவர் என்ற முறையில், சமூகநீதிக்குப் பெரியார்தான். ஆகவேதான், பெரியார் பிறந்த நாளை சமூகநீதி நாள் என்று அறிவித்தது பொருத்தமானதாகும்.

அமாவாசையைக்கூட அப்துல்காதர் வரவேற்றார்

நெறியாளர்: செப்டம்பர் 17 ஆம் தேதியை சமூகநீதி நாள் என்பதை நாங்களும் வரவேற்கிறோம் என்று பா...வினர் சொல்கிறார்கள்; ஏனென்றால், அன்று பிரத மர் மோடியினுடைய  பிறந்த நாள். அவரும் சமூகநீதி காத்த ஒரு காவலர்தான். ஆகவே, அந்த வகையில் நாங்களும் வரவேற்கிறோம் என்று தமிழ்நாடு பா... தலைவர்கள் ஒரு சிலர் வரவேற்கிறார்களே, அதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: அமாவாசையில் சில நேரங்களில், இறைச்சி சாப்பிடுபவர்களுக்கு மிகக் குறைந்த விலையில் கிடைக்கும். எனவேதான், அமாவாசையைக்கூட அப்துல் காதர் வரவேற்றார். அதிலொன்றும் சந்தேகமேயில்லை.

அப்படியிருந்தால், இத்தனை ஆண்டு ஏன் அறிவிக்க வில்லை? சமூகநீதிக்கு மோடி என்ன செய்தார்?

27 சதவிகிதத்தை ஒப்புக்கொள்வதற்குப் பதிலாக, நீட் தேர்வுக்கு இவ்வளவுப் பிடிவாதம் காட்டுகிறார்கள். கரோனா தொற்று காலகட்டத்தில், மற்ற தேர்வுகள் எல்லா வற்றையும் தள்ளி வைத்தார்கள். ஆனால், நீட் தேர்வை ஒத்தி வைக்காமல், ஏன் பிடிவாதம் காட்டவேண்டும்?

சமூகநீதியில் அவருக்கு நம்பிக்கை இருந்திருந்தால், இன்றைக்கு 27 சதவிகித இட ஒதுக்கீட்டை அவர்கள் ஒப்புக் கொண்டார்கள், அரசமைப்புச் சட்டத் திருத்தத்தினால் என்றால், அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.

ஒன்று, உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்புகளினால்; அப்படி செய்யாவிட்டால், நீதிமன்ற அவ மதிப்புக்கு ஆளாவோம் என்பதினால்.

இரண்டாவதாக, பெரியாரால் உருவாக்கப்பட்ட சமூகநீதி கருத்து, தமிழ்நாட்டோடு நின்றுவிடவில்லை. அது அகில இந்திய அளவில் வந்துவிட்டது.

உத்தரப்பிரதேசத்தின் உள்ளேயும் இருக்கிறது; அடுத்து உத்தரகாண்ட், குஜராத் போன்ற மாநிலங்களிலும் அந்தக் கருத்து வந்துவிட்டது என்றவுடன்,

எப்படியாவது அந்த வேடத்தையும், அந்தப் பாத்திரத்தையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற நிலை வந்திருக்கிறது.

சமூகநீதிப் போராட்டங்களை குஜராத் முதலமைச்சர் மோடி வரவேற்றாரா?

நெறியாளர்: பிரதமர் மோடியை சமூகநீதி காவலர் என்று அழைப்பதற்கு சில காரணங்களை அவர்கள் பட்டியலிடுகிறார்கள்; பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு கொடுத்தது; ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கத்தில் நிறைய பட்டியலினத்தவர், பெண்கள், விவசாயிகளை உள்ளடக்கி விரிவாக்கம் செய்தது; முற்பட்ட வகுப்பினரில், பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்ததும் ஒரு வகையிலான சமூகநீதி  - ஆகையால், இதுபோன்ற காரணங்களைப் பட்டியலிட்டு, பிரதமர் மோடி சமூகநீதிக் காவலர்; அதனால், செப்டம்பர் 17 ஆம் தேதி சமூகநீதி நாள் என்பதை ஏற்றுக்கொள்கிறோம் என்று சொல்கிறார்களே?

தமிழர் தலைவர்: மோடி 2014 இல்தான் பிரதமரானார். அதற்கு முன் மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தார். அன்றைய காலகட்டத்தில், குஜராத்தில் நடைபெற்ற சமூகநீதி போராட்டங்களை ஆதரித்திருக்கிறாரா?

முதலமைச்சராக அவர் இருந்தபொழுது, குஜராத் மாடல், குஜராத் மாடல் என்று சொன்னார்களே, சமூகநீதி போராட்டங்களை எப்பொழுதாவது ஆதரித்திருக்கிறாரா?  அதை அடக்கியிருக்கிறாரா?

2014 இல் பிரதமராக வந்த மோடி அவர்களுடைய அமைச்சரவையில், எத்தனை பேர் பிற்படுத்தப்பட்டவர்கள் அமைச்சராக இருந்தார்கள்?

எஸ்.சி., எஸ்.டி. என்று சொல்லப்படும் சமூகத்தைச் சார்ந்தவர்கள் எத்தனை பேர் அமைச்சராக இருந்தார்கள்?

மீண்டும் 2019 இல் பிரதமராக வந்ததிலிருந்து, அண் மைக்காலத்தில் மாற்றியமைக்கப்பட்ட அமைச்சரவைக்கு முன், அவருடைய அமைச்சரவையில் எத்தனை பேர் பிற்படுத்தப்பட்டவர்கள் அமைச்சராக இருந்தார்கள்? எஸ்.சி., எஸ்.டி. என்று சொல்லப்படும் சமூகத்தைச் சார்ந்தவர்கள் எத்தனை பேர் அமைச்சராக இருந்தார்கள்?

ஏன் இல்லை?

உத்தரப்பிரதேசத்திலும், மற்ற இடங்களிலும் இப் பொழுது அவர்களுக்கு நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது.

எங்கு பார்த்தாலும் இப்பொழுது சமூகநீதிக் காற்று வீசுகிறது. ஆகவே, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் அவர்களால் வெற்றி பெற முடியாது என்பதற்காகவும், மற்ற இடங்களில் வெற்றி பெறவேண்டும் என்பதற்காகவும்,  அவர்கள் இதனை ஆதரிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அரசியல் நிர்ப்பந்தம் - தேர்தல் வாக்கு வங்கி என்பதை மய்யப்படுத்தி கொண்டுவரப்பட்ட ஒரு திட்டம் அது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்அந்த மக்களுக்குத் துரோகம் நினைப்பாரா?

நெறியாளர்: பிரதமர் மோடி அவர்களே, பிற்படுத்தப் பட்ட வகுப்பைச் சார்ந்தவர்தான்; அவர் எப்படி நாட்டில் இருக்கக்கூடிய பெரும்பான்மை மக்களான பிற்படுத்தப் பட்ட மக்களுக்கு எதிராக யோசிப்பார்? நீங்கள் சொல்கிறீர் கள், மனுநீதியின் அடிப்படையில் ஒன்றிய அரசு செயல் படுகிறது என்று. பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த, மிகவும் பின்தங்கிய ஒரு நிலையில் இருந்து, பிரதமராக உயர்ந்தவர், எப்படி அந்த மக்களுக்குத் துரோகம் நினைப் பார் என்று கேட்கிறார்களே?

தமிழர் தலைவர்: அந்த நினைப்பு மோடிக்கு, அவர் முதலமைச்சராக இருந்தபொழுது வந்ததா?

பிரதமராக அவர் முதன்முறையாக வந்தபொழுது வந்ததா?

இரண்டாம் முறை வெற்றி பெற்றாரே, அப்பொழுது வந்ததா?

நீட் தேர்வு, ஏழை, எளிய மக்களுக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும், சமூகநீதிக்கு விரோதமாகவும் இருக்கிறது என்பதைத் தொடர்ந்து எடுத்துச் சொல்லி, தொடர்ந்து நாடாளுமன்றம் குரலெழுப்பி, வாதாடினார்களே, அப்பொழுது அவருக்கு இந்தச் சிந்தனை வந்ததா? வரவில்லையே!

இப்பொழுதுதானே வந்திருக்கிறது.

நீங்கள் கேட்கலாம், பின்னாளில் வரக்கூடாதா? என்று.

வரட்டும், அப்படி வந்தால், எங்களுக்குக் கிடைத்த வெற்றி என்றுதான் சொல்வோம்.

ஆனால், அதேநேரத்தில், உண்மையான, உள்ளார்ந்த எண்ணத்தில்சிந்தனை இருக்கிறது.

அவருடைய அடிப்படை கொள்கை - ஆர்.எஸ்.எஸ். கொள்கை அதுவல்ல. ஏனென்றால், ஆர்.எஸ்.எஸ். உத் தரவுப்படி நடக்கவேண்டியவர்கள்தான் அவர்கள்.

இப்பொழுது ஆர்.எஸ்.எசே அதனை லாவகமாக, தேர்தல் யுக்தியாக, வித்தையாகப் பயன்படுத்துகிறது.

பெரியாருக்கு 135 உயர அடி சிலை தேவையா என்போருக்குப் பார்வைக் கோளாறுதான்!

நெறியாளர்: அண்மையில் பெரியார் சிலை விவகாரம், பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. நிறைய பேர் விமர்சனக் கணைகளை உங்களை நோக்கி வீசினார்கள். குறிப்பாக அதில் ஒரு கேள்வியை கேட்டிருந்தார்கள், பெரியார் சிலையை, வள்ளுவர் சிலையைவிட உயரமாக அமைப் பதற்கான நோக்கம் என்ன? 135 அடி உயர சிலைக்கு என்ன நோக்கம் என்று கேட்கிறார்களே?

தமிழர் தலைவர்: முதலில் அவர்களுக்குப் பார்வைக் கோளாறு. பெரியார் சிலை, வள்ளுவர் சிலையை விட உயரமாக இருக்கக்கூடாதா? அப்படி இருந்தாலும், கொள்கை ரீதியாக தவறு கிடையாது.

ஏனென்றால், வள்ளுவரைத் தாண்டி ஒரு அறிவாளி வரக்கூடாதா என்ன?

அவர்களுடைய பார்வையில் கோளாறு என்று ஏன் சொன்னேன் என்றால்,

சிலையின் உயரம் 95 அடி; உயரத்தை வைத்து ஒரு தலைவருடைய சிலையை அளப்பதில்லை. இது பெரி யாருடைய அடையாளம்; வரலாற்று ரீதியாக 95 ஆண்டு காலம் வாழ்ந்திருக்கிறார் என்பதற்காக 95 அடி உயர சிலை.

அந்த சிலை உயரமாகவும், மிகச் சிறப்பாகவும், அறிவியல்பூர்வமாகவும் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் 40 அடி பீடம் அமைக்கப்படுகிறது.

பெரியார் என்ன செய்தார் என்பதை வரலாற்று ரீதியாகப் பாருங்கள்.

பெரியார் உயிரோடு இருந்திருந்தால் கண்டித்திருப்பாராமே!

நெறியாளர்: பெரியாருக்கு இந்த அளவிற்குப் பிரம் மாண்டமாக சிலை அமைப்பதை,  அவர் உயிரோடு இருந் திருந்தால், அவரே கண்டித்திருப்பார், தண்டித்திருப்பார் என்று சொல்கிறார்களே?

தமிழர் தலைவர்: அந்தப் புத்திசாலிகளுக்கெல்லாம் ஓர் அற்புதமான பதில், பெரியாருக்குத் திண்டுக்கல்லில் சிலை திறந்தபொழுது, எனக்கு மட்டும் சிலை வைக்கக்கூடாது; எல்லா பகுத்தறிவாளர்களுக்கும் சிலை வைக்கவேண்டும் என்று உரையாற்றினார்.

கலைஞர் கருணாநிதிக்கு சிலை வைக்கவேண்டும்; வீரமணிக்கு சிலை வைக்கவேண்டும்; மதுரை முத்துக்கு சிலை வைக்கவேண்டும் என்று பேசி, அந்தப் பேச்சை, வைகோ அவர்கள் விருத்தாசலம் சிலை திறப்பு விழாவில் உரையாற்றும்பொழுது எடுத்துக்காட்டி உரையாற்றி இருக்கிறார்.

ஆகவே, ஒவ்வொரு பெரியார் சிலைகளும், பெரியாரை முன்னிலைப்படுத்தி திறக்கப்பட்டு இருக்கிறது.

திருச்சியில், பெரியாருக்கு முதல் சிலை-

தருமபுரியில் இரண்டாவது சிலை

பெரியார் இல்லாமல், பெரியார் வாழ்ந்த காலத்தில், பெரியார் சிலை திறக்கப்படவில்லை. ஈரோடு உள்பட. இந்த வரலாறே தெரியாதவர்கள், விஷமத்தனமாக, பெரியாரை புரிந்துகொண்டவர்கள் போன்று, வித்தியாசமாக பெரியார் உயிரோடு இருந்திருந்தால் ஒப்புக்கொண்டிருக்க மாட்டார் என்று சொல்கிறார்கள்.

நூறு கோடி ரூபாயில் பெரியாருக்கு சிலையல்ல!

நெறியாளர்: நூறு கோடி ரூபாய் அளவிற்கு சிலை வைப்பது...

தமிழர் தலைவர்: இது தவறான தகவல். நூறு கோடி ரூபாயில் சிலை அல்ல. அதுவே, அறியாமை, அரை வேக்காட்டுத்தனம்.

ஒருவரைப்பற்றி விமர்சனம் செய்யும்பொழுது, அது எப்படிப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டியது ஒவ்வொருவருடைய கடமை.

பெரியார் உலகம் என்பது அந்தத் திட்டம். அது அய்ந்து கட்டங்களாக நடைபெறவிருக்கிறது.

எப்படி அமெரிக்காவில் டிஸ்னிவேர்ல்டு என்று இருக்கிறதோ, அதுபோன்று, பெரியார்  உலகத்தில், பெரியா ருடைய வரலாற்றுக் காவியம் - கோளரங்கம் - ஒலி, ஒளி காட்சி - பெரியார் படகு முகாம் - குழந்தைகள் நூலகம், பெரியவர்களுக்கான நூலகம் - ஆய்வகங்கள் என்று இப்படி ஒவ்வொரு கட்டமாக அமைக்கப்பட்டு, 30 ஏக்கரில் கட்டமைக்கப்பட உள்ளது பெரியார் உலகம்.

அரசாங்கத்தினுடைய திட்டமல்லவே அது. பெரியா ருடைய அறக்கட்டளையின் சார்பாக கட்டமைக்கப் படவிருக்கிறது. அதற்கான நிதியை மக்கள் கொடுக்கிறார்கள்; நன்றி உணர்ச்சி இருக்கின்றவர்கள் கொடுக்கிறார்கள்; நன்றி மறந்தவர்களைப்பற்றி கவலையில்லை. விமர்சனம் செய்கிறவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? அவர்கள் நன்றி மறந்தவர்கள் என்கிற அடையாளத்தைத் தவிர, வேறொன்றும் கிடையாது. ஆகவே, அவர்கள் சொல்வதை நாங்கள் பொருட்படுத்தவேண்டிய அவசியமில்லை.

பெரியாரின் சிந்தனைகளை உலகம் முழுவதும் கொண்டு சென்றிருக்கின்றோம்!

நெறியாளர்: பெரியார் என்றால், பெரியார் சிலை மட்டு மல்ல; பெரியாரின் கருத்துகள், பெரியாருடைய சிந்தனைகள் - அந்த சிந்தனைகள் உலகம் முழுவதும் உள்ள வெகுஜன மக்களிடம் போய்ச் சேருவதற்கு என்ன செய்தீர்கள்? வெறும் சிலை வைத்தால் மட்டும் போதுமா? அவருடைய சிந்தனைகள்தானே போய்ச் சேரவேண்டும் என்று கேட்கிறார்களே?

தமிழர் தலைவர்: அப்படி கேட்கிறவர்கள் என்ன செய்தார்கள் என்பதை முதலில் சொல்லிவிட்டுக் கேட் கட்டும். எங்களைவிட அதிகம் செய்திருந்தால், கேட்கலாம்.

பெரியாருடைய கருத்துகளை உலகம் முழுவதும் கொண்டு செலுத்தியிருக்கிறோம். வருகின்ற 17 ஆம் தேதி, ஜப்பான் மொழியில், பெரியாருடைய புத்தகங்கள் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்படவிருக்கின்றது.

இந்தியா முழுவதும், உலகம் முழுவதும் பெரியாருடைய சிந்தனைகள் பரவியிருக்கின்றன.

பிரெஞ்சு நாட்டில், பெரியாருடைய ‘‘பெண் ஏன் அடிமையானாள்?'' புத்தகம் இருக்கிறது.

இவற்றையெல்லாம் திட்டமிட்டு, விஷமத்தனமாக பெரியாருடைய கருத்துகளை வெகுஜன மக்களிடம் கொண்டு செல்லவில்லை என்று கேட்கிறார்கள்.

அவர்களைப் பார்த்து பரிதாபப்படுவதைத் தவிர, வேறொன்றும் எங்களால் செய்ய முடியாது.

யார் தமிழர்கள்?

நெறியாளர்: தமிழ்நாட்டில் எல்லாத் தரப்பு மக்களின் வாக்குகளையும் வாங்கிக்கொண்டு, திராவிடக் கொள்கை களுக்கு மட்டுமே அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப் படுகிறது. தமிழன் என்று சொல்லிவிட்டு, திராவிடன் ஸ்டாக் என்று ஆட்சிக்கு வந்த பிறகு, மாற்றம் பெறுவது என்பது முரண்பாடான நிலை அல்லவா என்று கேட்கிறார்கள்?

தமிழர் தலைவர்: இந்தக் கேள்வியை கேட்கிற, பிரபலமான தமிழ்த் தேசியவாதிகளைப் பார்த்து ஒரே ஒரு கேள்வி.

யார் தமிழர்கள் என்பதை அவர்கள் வரையறுத்துச் சொல்லட்டும். பிறகு தமிழர்கள் என்ற அடையாளம் போய்விட்டதா என்பதைப்பற்றி சொல்வோம்.

எங்களைப் பொறுத்தவரையில், தமிழ்த்தேசியம் பேசுகிறவர்கள் எல்லாம் தமிழர்கள் அல்ல.

திராவிடம் என்று சொல்லுகின்ற நேரத்தில், அது ஒரு பண்பாடு - மொழி. திராவிடம் என்பது இப்பொழுது புதிதாக உருவானதல்ல.

ஆரியம் - திராவிடம் என்று வருகிறபொழுது, இரு வேறு பண்பாடுகள். அந்த இருவேறு பண்பாட்டு அடிப்படையில்தான், முரண்பாடு என்று சொல்வதே தவறு.

அவர்கள் அடிப்படையிலேயே தவறு செய்கிறார்கள்.

தேவநேயபாவாணர், புரட்சிக்கவிஞர் போன்றோர் சொன்னதுபோன்று, திராவிடம் என்பது தமிழின் பிரிவுதான் - அதைப் புரியாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மிகப்பெரிய ஆய்வறிஞர்களாக இருக்கக்கூடிய வர்களே சொல்லியிருக்கிறார்கள்.

ஆரியத்திற்கு நேர் எதிரானதுதான் திராவிடம்!

நெறியாளர்: பிரிவை ஏன் நாங்கள் பயன்படுத்தவேண்டும் என்று சொல்கிறார்களே?

தமிழர் தலைவர்: பிரிவு அல்ல - அதனுடைய வளரச்சி. இன்னுங்கேட்டால், எங்களைப் பொறுத்தவரையில், இன் னும் அதிகமான அளவிற்கு தத்துவ ரீதியாக, லட்சிய ரீதியாக இருப்பது திராவிடம் என்பது.

ஆரியம் என்பதற்கு நேர் எதிரானது என்ன?

திராவிடம்.

ஆரியம் - வருணாசிரம தர்மத்தைச் சொல்லுவது.

திராவிடம் என்பது அனைவருக்கும் அனைத்தும் - சமம் என்று சொல்வது.

தத்துவ ரீதியாக, இட ஒதுக்கீடு, சமூகநீதி, கல்வி இப்படி எல்லாவற்றையும்.

ஏனென்றால், இன்க்ளூசிவ் - எஸ்க்ளூசிவ் என்று வரக்கூடிய அளவிற்கு இதைச் சொல்கிறோம்.

அந்தப் பார்வை எங்களுக்குத் தெளிவாக இருக்கிறது.

ஆகவேதான்,  பண்பாட்டு அடிப்படையில், திராவிட நாகரிகம், திராவிட மொழி அதுதான் அடிப்படை.

மொழியால் தமிழன்வழியால் - விழியால் திராவிடன்!

நெறியாளர்: உங்களை நோக்கி ஒரு விமர்சனம் சொல் கிறார்கள்; தமிழர் தலைவர் என்று உங்களை அடைமொழி யிட்டு அழைக்கிறார்கள். நீங்கள் தமிழர் திருநாள் பொங் கலன்று, திராவிடர்த் திருநாள் என்று கொண்டாடுகிறீர்கள். தமிழர் தலைவர் ஏன் திராவிடர்த் திருநாளைக் கொண் டாடுகிறார்; தமிழர் திருநாளைக் கொண்டாடலாமே என்று கேட்கிறார்கள்?

தமிழர் தலைவர்: மனுதர்மத்தில், விவசாயத் தொழில் என்பது பாவகரமான தொழிலாகும். திராவிடப் பண்பாடு, திராவிடத்தினுடைய தன்மை, திராவிட மொழி, திராவிட நாகரிகம் என்ற அடிப்படையில் திராவிடர்த் திருநாள்.

இதில் முரண்பாடே இல்லை. முரண்பாடு போன்று மற்றவர்கள் காட்டுகிறார்களே, தவிர வேறொன்றும் இல்லை.

நான் மொழியால் தமிழன். மொழி பேசும்போது நான் தமிழ் மொழி பேசுகிறேன். வழியால் திராவிடன் - விழியால் திராவிடன் என்பதுதான் மிகவும் முக்கியம்.

வழி - விழி - பண்பாடு - நாகரிகம் - கலை இவ்வளவுதான். இதைப் போட்டுக் குழப்பவேண்டிய அவசியமேயில்லை.

அரசியலுக்காக, குறை சொல்வதற்காகச் சொல் கிறார்களே, தவிர, வேறொன்றும் இல்லை.

(தொடரும்)

No comments:

Post a Comment