உலகில் ஓட்டுநர் இல்லாத முதல் பயணிகள் ரயில் அறிமுகம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 15, 2021

உலகில் ஓட்டுநர் இல்லாத முதல் பயணிகள் ரயில் அறிமுகம்

ஹம்பர்க், அக்.15 ஜெர்மனி உலகிலேயே முதன்முறையாக, ஓட்டுநர் இல்லாத தானியங்கி பயணிகள் ரயில் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

ஜெர்மனியில் ஹம்பர்க் நகரில் டிஜிட்டல் தொழில்நுட்ப முறை யில் இயங்கும் முழுமையான ஒரு தானியங்கி ரயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில், மிகச்சரியான நேரத்துக்கு வரும் என்றும், வழக்கமான ரயில்களை விட குறைவான எரிபொருள் செலவில் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் மேலும் நான்கு இத்தகைய தானியங்கி ரயில்கள் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், அவை டிசம்பர் மாதம் முதல் பயணிகள் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.

ஆனால், இது தானியங்கி ரயில் ஆனாலும், பயணத்தை மேற் பார்வையிட ரயிலில் ஒரு ஓட்டுநர் இருப்பார் என்பது குறிப்பிடத் தக்கது.

பாரீஸ் முதலான நகரங்களில் ஓட்டுநர் இல்லாமல் இயங்கும் ரயில்கள் ஏற்கெனவே உள்ளன. அத்துடன், விமான நிலையங் களிலும் தானே இயங்கும் ரயில்கள் உள்ளன. ஆனால், அந்த ரயில்கள், அவற்றிற்கென அமைக்கப்பட்ட தனிப் பாதையில் இயங்கும். தற்போது ஜெர்மனியில் அறிமுகப் படுத்தப்பட்ட ரயிலோ, வழக்கமாக மற்ற ரயில்கள் பயணிக்கும் அதே பாதைகளில் இயங்கும் என்பது தான் இந்த ரயிலின் சிறப்பம்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது-.

No comments:

Post a Comment