நியூயார்க், அக்.15 கரோனா பாதிப்புகள் காரணமாக, குறைந்த வருவாய் கொண்ட ஏழை நாடுகளின் கடன், கடந்த ஆண்டில் 12 சதவீதம் அதிகரித்து, 64.50 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என, உலக வங்கி தெரிவித்துள்ளது.மேலும், நிலைமை மோசமாக இருப்பதால் உடனடியாக இந்த ஆண்டுக்குள்ளாக கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், உலக வங்கி வலியுறுத்தி உள்ளது.
கரூர் வைஸ்யா வங்கிக்கு அனுமதி
புதுடில்லி, அக்.15 கரூர் வைஸ்யா வங்கிக்கு, ஒன்றிய நேரடி வரிகள் வாரியம் சார்பில், நேரடி வரிகளை வசூலிக்க, ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
இதைத் தொடர்ந்து வரிகளை வசூலிக்க, ஒன்றிய நேரடி வரிகள் வாரியத்துடன் ஒருங்கிணைப்புக்கான பணிகளை கரூர் வைஸ்யா வங்கி துவங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒருங்கிணைப்பு பூர்த்தியானதும் வாடிக்கையாளர்கள் வங்கி கிளைகள் அல்லது செயலி வாயிலாக வரி செலுத்தலாம்.
இந்திய பங்குச் சந்தையில் டாடா குழுமத்தின் பங்குகள்: 20 சதவிகிதம் வரை அதிகரிப்பு
மும்பை, அக்.15 இந்திய பங்குச் சந்தையில் டாடா குழுமத்தின் பங்குகளின் விலை ஒரே நாளில் அதிரடியாக 20 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளது.
இதன் மூலம் பங்குச்சந்தையில் டாடா குழுமத்தின் சந்தை மதிப்பு ஒரே நாளில் 70,000 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
'யுனிகார்ன்' ஆனது மொபிகுவிக்
புதுடில்லி, அக்.15 நிதி தொழில்நுட்ப ஸ்டார்ட் அப் நிறுவனமான 'மொபிகுவிக்' நிறுவனத்தின் சந்தை மதிப்பு, ஒரு பில்லியன் டாலர், அதாவது 7,500 கோடி ரூபாயை தாண்டியதை அடுத்து, 'யுனிகார்ன்' தகுதியை பெற்ற நிறுவனமாக உயர்ந்துள்ளது.
இந்நிறுவனம் 1,900 கோடி ரூபாய் நிதி திரட்டும் வகையில், புதிய பங்கு வெளியிட்டுக்கு வர திட்டமிட்டுள்ள நிலையில், இந்த யுனிகார்ன் தகுதியை பெற்றுள்ளது.
No comments:
Post a Comment