டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
· உத்தரப்பிரதேச லக்கிம்பூரில் நடைபெற்ற விவசாயிகள் படுகொலைக்கு பொறுப்பேற்று ஒன்றிய அரசின் உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக எதிர்க்கட்சிகள் அழுத்தம்.
சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பு விவகாரத்தில் திருத்தப்பட்ட புதிய பாடத்திட்டம் 2022-2023ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்த ஒன்றிய அரசு, இந்த ஆண்டுக்கான தேர்வு பழைய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தான் நடைபெறும் என தெரிவித்துள்ளது.
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக பாஜக அல்லாத மாநில முதல்வர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையிலான குழுவினர் நேற்று (6.10.2021) கேரள முதல்வர் பினராய் விஜயனிடம் அளித்தனர். நீட் தேர்வை ரத்து செய்வதற்கு ஆதரவு தரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் உயர்பதவிகளில் இன்னமும் உரிய பிரதி நிதித்துவம் பெற வில்லை என ஒன்றிய அரசின் அடிசினல் சொலிசிட்டர் ஜெனரல் உச்ச நீதிமன்றத்தில் பதில்
பி.எம்.கேர்ஸ் நிதியம் ஒன்றிய அரசுக்கு தொடர்பில்லாதது என்று கூற முடியாது என டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
உத்தரப்பிரதேச வன்முறை தொடர்பாக தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. லக்கிம்பூர் சம்பவம் - உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.
டைம்ஸ் ஆப் இந்தியா:
வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க புலம்பெயர் தமிழர் நல வாரியம் அமைக்கப்படும் என்றும், வெளிநாட்டில் உள்ள தமிழர் நலனுக்காக ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..
- குடந்தை கருணா
No comments:
Post a Comment